TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy Anand
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மற்றும் இளம்பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதுபோதையில் தொண்டர் ஒருவர் கூட்டத்தில் நடனமாடிய தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் செங்கல்பட்டு மேற்க்கு மாவட்டம் சார்பில் மின்னல் குமார் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடம் நடைபெற்றது,
இதில் கலந்து கொண்ட ஆனந்த் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து நிவாகிகளின் குழந்தைகளுக்கு கேக் ஊட்டினார். அவருக்கு காமராஜ் பெரியார்,அம்பேத்கார் சிலை மற்றும் வேலு நாச்சியார்,அஞ்சலை அம்மள் உருவம் பொறித்த உருவபடத்தை மாவட்ட நிர்வாகிகள் நினைவு பரிசாக வழ்ங்கினர் ,
பின்பு 500 நபர்களுக்கு கிறிஸ்துமஸ் தொகுப்பாக காலண்டர் கேக், புடவை,வாசகம் அடங்கிய அட்டை ஆகியவற்றை தொகுப்பாக வழங்கப்பட்டது. அப்போது ஒரே நேரத்தில் தொகுப்பினை வாங்குவதற்காக பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய மூதாட்டி மற்றும் இளம் பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதனால் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏறட்டது,
மேலும் தொண்டர் ஒருவர் மதுபோதையில் நிகழ்ச்சியின் போது நடனமாடினார் அவரை தவெக நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது