![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Saattai Durumurugan Arrest | தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் கண்டனம்
காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் கண்டனம்
![Saattai Durumurugan Arrest | தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் கண்டனம் seeman condemns saattai duraimurugan and 3 others arrest and gives statement Saattai Durumurugan Arrest | தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் கண்டனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/d20f4011a1519ba1e72e5b955287a0d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
"தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! - சீமான் கண்டனம் https://t.co/lknhmaIOh7
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) June 11, 2021
மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்” என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும் சாட்டை யூட்யூப் தளத்தை நிர்வகித்துவரும் யூ-டியூப் பதிவர் துரைமுருகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். துரைமுருகன் உட்பட 4 பேர் திருச்சியில் போலீசார் கைது செய்துள்ளனர். கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.துரைமுருகனுடன் சேர்ந்து கார் ஊழியரை மிரட்டிய வினோத், சரவணன், சந்தோஷ் ஆகியோரும் கைதாகியுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)