சரவெடிக்கு தடை... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சரவெடிகளை உற்பத்தி செய்வதற்கோ, விற்பதற்கோ, வெடிப்பதற்கோ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அந்த கால நேரத்தை, காலை 4 மணி நேரமாகவும், மாலை 4 மணி நேரமாகவும் அதிகரித்து உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும், விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டுமென இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டன. அதன்படி, “தடை செய்யப்பட்ட வேதி பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடித்தால் காவல் துறை, அரசு அதிகாரிகளே பொறுப்பு.
தடை செய்யப்பட்ட பட்டாசை வெடிக்கக்கூடாது என அரசு விளம்பரப்படுத்த வேண்டும். சரவெடியை உற்பத்தி செய்யவோ, வாங்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது. பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
போலி பசுமை பட்டாசுகளை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajinikanth Health Update | ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன? விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிறாரா? : மருத்துவமனை விளக்கம்..
ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை இதுதான்.. Carotid Artery Revascularisation என்றால் என்ன?
Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரணம் : நேரலையில் கண்ணீர்விட்டு கதறிய செய்தி வாசிப்பாளர்..
”ஜெயிக்கணும்னு நினைச்சா உங்க வாழ்க்கை ஒரு பாடம்..” புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
Puneeth Rajkumar Profile : மக்களின் அன்புக்குரிய ’அப்பு’ என்னும் ’புனீத் ராஜ்குமார்’.. யார் இவர்?
Watch Video: டிக்டாக் வீடியோ நீங்கதான் பாப்பீங்களா? நானும் பாப்பேன்.. வைரலாகும் மியாவ் வீடியோ