IPL Auction 2025 : "MOST EXPENSIVE PLAYER" ஸ்ரேயஸ்சை காலி செய்த பண்ட்Silent mode-ல் CSK! | Rishabh Pant | Shreyas Iyer
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் போய்.. தன்னை தூக்கி எறிந்த DELHI அணியை வாயை பொளக்க வைத்திருக்கிறார் ரிஷப் பண்ட். CSK அணி இவரை ஏலத்தில் எடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடைசி வரை CSK silent mode-ல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையைச் செய்திருக்கிறது.
சவுதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான ஏலம். ஏலம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்ககா கடந்த முறை விளையாடிய கோப்பையை வென்றுக்கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 27.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷ்ரேயாஸ்.
ஆனால் இந்த சாதனையை அடுத்ததாக ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்ட் முறியடித்தார். கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடிய ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன MOST EXPENSIVE வீரர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் 2025 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி வரை silent mode-ல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையைச் செய்திருக்கிறது.