Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
IPL Auction 2025:ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாக இருந்த முகமது சிராஜை 12.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது குஜராத் டைடன்ஸ்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாக இருந்த முகமது சிராஜை 12.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது குஜராத் டைடன்ஸ்.
ஐபிஎல் ஏலம்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், மொஹமது சிராஜ் தனது புதிய ஐபிஎல் அணிக்கு சென்றுள்ளார்,அவரை குஜராத் டைட்டன்ஸ் வரவிருக்கும் சீசனுக்கான அவரை குஜராத் டைடன்ஸ் அணி 12.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக சிராஜ் ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
சிஎஸ்கேவும் குஜராத் அணியும் ஏலம் கேட்க தொடங்கினர். 8 கோடி வரை சிஎஸ்கே அணி ஏலம் கேட்டது. அதன்பின் ஏலத்தில் இருந்து சிஎஸ்கே விலகியது. அதன் பின்னர் குஜராத் டைட்ன்ஸ் அணியும் ராஜாஸ்தான் அணியும் கோதாவில் குதித்தது. இறுதியில் குஜராத் அணி 12.25 கோடிக்கு ஏலத்தில் தட்டித்தூக்கியது. ஆர்சிபி அணியிடம் ஆர்டிஎம் கேட்ட போது அவர்கள் வேண்டாம் என்றனர். இது சற்று அதிர்ச்சியை கொடுத்தது என்றே சொல்லலாம். முக்கியமாக சிராஜ் ஆர்சிபி அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் 6 சீசன்கள் விளையாடினர். அவருக்கு கோலிக்கு இடையேயான பிணைப்பு ரொம்ப நாட்களாக இருந்தது.
Need some speed #GT fans 🤔
— IndianPremierLeague (@IPL) November 24, 2024
Mohammed Siraj on his way! 👌👌#TATAIPLAuction | #TATAIPL | @mdsirajofficial | @gujarat_titans pic.twitter.com/ptxZ0kugtv
சிராஜ் ஐபிஎல் கேரியர்:
சிராஜ் 2017 இல் சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார், மேலும் முதல் சீசனி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி விமர்சகர்களைக் கவர்ந்தார். அவரை 2018 இல் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. அதன் பிறகு அவர்களின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருந்து வந்தார் முகமது சிராஜ். 2023 ஐபிஎல்லில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் இது தான் சிராஜின் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. இதனால், ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபி அவரை விடுவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது ஐபிஎல் வாழ்க்கையில், சிராஜ் தற்போது 93 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கட்டுப்பாட்டுடனும், ஆக்ரோஷத்தை கலக்கக்கூடிய அவரது திறமை, பவர்பிளே மற்றும் டெத் ஓவர்கள் இரண்டிலும் பந்து வீசும் திறன் கண்டிப்பாக எதிரணிக்கு குடைச்சலை கொடுக்கும்.
இதையும் பாருங்க: IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில், இப்போது 93 போட்டிகளில் விளையாடியுள்ளார், 93 விக்கெட்டுகளை 4/21 மற்றும் எகானமி ரேட் 8.64 உடன் எடுத்துள்ளார், இது நம்பகமான T20 பந்துவீச்சாளராக அவரது பரிணாமத்தை பிரதிபலிக்கிறது.அவரது கூர்மையான ஸ்விங் மற்றும் ஆக்ரோஷமான குணத்திற்கு பெயர் போன சிராஜ், பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார், குறிப்பாக பவர்பிளே ஓவர்களில், பந்தை இருபுறமும் நகர்த்தும் அவரது திறன் அவரை தனித்துக்காட்டுகிறது. இருப்பினும், அவர் 2025 இல் புதிய பயணத்தை தொடங்க நிச்சயம் ஆவலாக இருப்பார்.