மேலும் அறிய

‛பாலியல் வன்கொடுமையில் சமரசம் இல்லை’ பாதிரியாருக்கு ஜாமின் கேட்ட பெண் மனு தள்ளுபடி!

பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அச்சிறுமி  கர்ப்பமாகி பிப்ரவரி 2, 2017 அன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு தற்போது 21 வயது.

பாலியல் வன்கொடுமையை செய்தவரையே திருமணம் செய்ய அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடிய பெண்ணின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது சிறுமி, கத்தோலிக்க பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். போக்ஸோ சட்டத்தின் கீழ் தலச்சேரி சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை விரிவு செய்யக் கூடிய  சிறைத் தண்டனையும், ரூ .3 லட்சம் தண்டனைத் தொகையும் விதித்தது.  பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அச்சிறுமி  கர்ப்பமாகி பிப்ரவரி 2 2017 அன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு தற்போது 21 வயது. பின்னர் தானே அந்தபெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என்றும், ஜாமின் வழங்க வேண்டுமென்றும் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார் பாதிரியார். ஆனால் மனுவை தள்ளுபடி செய்தது கேரள நீதிமன்றம்.

‛பாலியல் வன்கொடுமையில் சமரசம் இல்லை’ பாதிரியாருக்கு ஜாமின் கேட்ட பெண் மனு தள்ளுபடி!

இந்நிலையில், அப்பெண்ணின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஜோசப் மூலம் தாக்கல் செய்த மனுவில், "சிறைத்தண்டனை பெற்றுவரும் பாதிரியாரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், குழந்தைக்கு திருமணமாகாத தாய் என்ற அவப்பெயரை தவிர்க்க விரும்புவதாகும்" தெரிவித்திருந்தார். குற்றவாளி சிறைக்குள் இருக்கும் போது திருமணம் நடப்பதற்கு  சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, குற்றவாளியை இரண்டு மாத காலம் பிணையில் வெளியிட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் மனுதாக்கல் செய்தார். இருப்பினும், இந்த வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் துரதிஷ்டவசமானது என்று பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரின் மன உளைச்சல், குழந்தையின் வாழ்க்கை சூழல், மனுதாரர் மற்றும் குற்றவாளி திருமணம் செய்வதற்கான உரிமையை உயர்நீதிமன்றம் கணக்கில் கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார்.     

‛பாலியல் வன்கொடுமையில் சமரசம் இல்லை’ பாதிரியாருக்கு ஜாமின் கேட்ட பெண் மனு தள்ளுபடி!

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பினேஷ் மகேஸ்வரி ஆகியோர் பாதிரியாருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர். இது குறித்து தெரிவித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்கில் சமரசம் என்பதை ஏற்க முடியாது.  இது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனைக் காரணம் காட்டி எதிர்காலத்தில் குற்றவாளிகள் தப்பிக்க நேரிடும் என தெரிவித்தனர்.

போக்ஸோ சட்டம்:  

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act,) போக்ஸோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.  இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில்  அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்ம் 2019ம் ஆண்டு திருத்தப்பட்டது. 

சிறப்பு நீதிமன்றங்கள் மூலம்,  2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயேஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
தூக்கத்தால் வந்த துக்கம்! 350 லிட்டர் டீசல் போச்சே - நாட்றம்பள்ளியில் நடந்தது என்ன?
தூக்கத்தால் வந்த துக்கம்! 350 லிட்டர் டீசல் போச்சே - நாட்றம்பள்ளியில் நடந்தது என்ன?
Rohit Sharma: பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ - எஸ்கேப் ஆன ஸ்கை? சாதித்து காட்டுவாரா ரோகித் சர்மா?
Rohit Sharma: பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ - எஸ்கேப் ஆன ஸ்கை? சாதித்து காட்டுவாரா ரோகித் சர்மா?
IND Vs ENG: கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
TVK 2nd Year: 2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
Embed widget