மேலும் அறிய

விசாரணையில் குறுக்கிட்டு பாட்டுப் பாடி 'மைலார்டையே' கடுப்பேத்திய நெட்டிசன்கள்!

வீடியோ தளம் வாயிலாக நடந்த விசாரணையில் சில விஷமிகள் குறுக்கிட்டனர். ‘Meri Banno Ki Aayegi Baraat’ என்ற ஜூஹி சாவ்லாவின் பாடலைப் பாடினர். இன்னும் சிலர் இமோஜிக்களை அனுப்பினர். மனிஷா கொய்ராலா, ஜான்வி என நடிகைகளின் போட்டோக்களைப் பகிர்ந்து நீதிபதியை வெறுப்பேற்றினர்.

5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையின்போது ஆன்லைனில் ஊடுருவிய சில விஷமிகள் பாட்டுப்பாடியும், இமோஜிக்களை அனுப்பியும் நீதிபதிகளை அதிருப்தியடையச் செய்தனர்.
வடிவேலு நகைச்சுவையில் கடுப்பேத்துறார் மைலார்ட் என்றொரு வசனம் வரும். ஆனால், நெட்டிசன்கள் இங்கு மைலார்டையே கடுப்பேத்தியிருக்கின்றனர்.


விசாரணையில் குறுக்கிட்டு பாட்டுப் பாடி 'மைலார்டையே' கடுப்பேத்திய நெட்டிசன்கள்!
தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவரிசையில் இணைந்துகொண்டுள்ள நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. WebEx வீடியோ தளம் வாயிலாக இந்த விசாரணை நடைபெற்றது. நீதிபதி மிதா அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வர மனுதாரர் ஜூஹி சாவ்லா, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு சொலிசிட்ட ஜெனரல் டுஸார் மேத்தா எனப் பலரும் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில், விசாரணையில் சில விஷமிகள் குறுக்கிட்டனர். ‘Meri Banno Ki Aayegi Baraat’ என்ற ஜூஹி சாவ்லாவின் பாடலைப் பாடினர். இன்னும் சிலர் இமோஜிக்களை அனுப்பினர். மனிஷா கொய்ராலா, ஜான்வி என நடிகைகளின் ஃபோட்டோக்களைப் பகிர்ந்தனர். ஒருகட்டத்தில் விசாரணையில் 200 தனிநபர்கள் குறுக்கிட்டனர். இதனால், நீதிபதி அதிருப்தியடைந்தார். பின்னர் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் விசாரணை தளம் பாதுகாக்கப்பட்டது. 

அதன் பின்னர் விசாரணையைத் தொடர்ந்த நீதிபதி, 5ஜி விஷயத்தில் முதலில் அரசின் விளக்கம், நிலைப்பாடு என்னவென்று அறியாமலேயே ஜூஹி எதற்காக நேரடியாக நீதிமன்றத்தை அணுகினார் என்று கடிந்து கொண்டார். இவ்வாறாக வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இது முழுக்கமுழுக்க ஊடக கவனத்தைப்பெற செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வழக்கின் விசாரணையை தொழில்நுட்ப இடையூறு காரணமாக ஒத்திவைத்தார்.
அதேவேளையில், நீதிமன்ற விசாரணையில் குறுக்கிட்ட நெட்டிசன்களின் ஐபி அட்ரெஸ் கொண்டு அவர்களின் வீட்டு அட்ரஸைக் கண்டுபிடித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.


விசாரணையில் குறுக்கிட்டு பாட்டுப் பாடி 'மைலார்டையே' கடுப்பேத்திய நெட்டிசன்கள்!

5ஜியும் கொரோனா சர்ச்சையும்..
நம் நாட்டில் 2ஜியில் தொடங்கிய சர்ச்சை 5ஜி வரையிலும் ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. அண்மையில், 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது என ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்தனர். இதனை அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு மறுத்தது. இதுதொடர்பாக தொலைத்தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் நீண்ட விளக்கம் கூட வெளியிட்டது.
இந்தியாவில் இன்னும் 5ஜி பணிகள் ஆரம்பிக்கவே இல்லை. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget