மேலும் அறிய

New Train In Tamilnadu : பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?

New Train In Tamilnadu : தமிழக மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக 4 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவைகள் அதிகரித்தும், கூடுதல் நிறுத்தங்களையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்

பொதுமக்கள் வெளியூர் பயணமாக இருந்தாலும், நீண்ட தூர பயணமாக இருந்தாலும் ரயில் சேவையை அதிகளவில் விரும்பி பயணிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், குறைந்த கட்டணம் முக்கிய காரணமாக உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக நாடு முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோடிக்கணக்கான மக்களும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இருந்த போதும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையே உள்ளது. 3 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தாலும் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்து விடுகிறது. 

நிரம்பி வழியும் கூட்டம்

இதனால் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. பல ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநிலத்தவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் தான் தமிழக மக்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் புதிதாக 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாலக்காடு பொள்ளாச்சி இடையே பயணிகளுக்கான மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில், போத்தனூர் - தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில், திருநெல்வேலி - மங்களூரு விரைவு ரயில் ஆகிய நான்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 4 புதிய ரயில்கள்

மேலும் மங்களூரு - சென்ட்ரல் - ராமேஸ்வரம் விரைவு ரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவித்துள்ளார். இதே போல தாம்பரம் -ராமேஸ்வரம் விரைவு ரயில், பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். 
இது மட்டுமில்லாமல் திருச்சி காரைக்குடி பயணிகள் ரயில் வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும். எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் போடி விரைவு ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய ரயில் அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு புதிய ரயில் அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தமிழகத்திற்குப் புதிதாக கூடுதல் ரயில்களை இயக்குவது. சில வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தாம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாக அமைச்சர்  எல் முருகன் தெரிவித்துள்ளார்.இந்த வேண்டுகோளை ஏற்று புதிய ரயில் மற்றும் கூடுதல் நிறுத்தம் அறிவித்தற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
மது போதையில் தகராறு !! மாமனாரை துப்பாக்கியால் போட்டு தள்ளிய மருமகன்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
DMK:
DMK: "பெயிண்ட் டப்பாவை எட்டி உதைத்து.." மனோஜ்பாண்டியனுக்கு ஆலங்குளம் தொகுதியில் எதிர்ப்பு!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Embed widget