ரயிலில் இனி ஜாலியா போகலாம்! அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு.. அசத்தும் ரயில் ஒன் செயலி
ரயில் பயணத்தின்போது உணவினை ஆன்லைனில் முன்பதிவு செய்தல், ரயில் நிலையங்களில் பயணிகளின் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளர்களை முன்பதிவு செய்தல் என அனைத்து விதமான வசதிகளையும் தருகிறது ரயில் ஒன் செயலி.

ரயில்வே தகவல் அமைப்பு மையத்தின் 40ஆவது நிறுவன தினத்தையொட்டி ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு:
எளிதில் பயன்படுத்தக் கூடிய இந்த செயலியை ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது, அனைத்து பயணிகள் சேவைகளையும் ஒருங்கிணைக்கிறது.
முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் 3% தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்வது, ரயில் பயணத்தை கண்காணிக்கும் வசதி, பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் சேவை உள்ளிட்டவை இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன.
ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு முன்பதிவு செய்யும் வசதி, ரயில் நிலையங்களில் பயணிகளின் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளர்களை முன்பதிவு செய்தல், வாடகை கார்களை முன் பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவையும் இதில் உள்ளன.
அசத்தும் ரயில் ஒன் செயலி:
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து வழங்கப்படும். மேலும், இந்த இணையதளத்தால் ரயில் ஒன் செயலியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரயில் கனெக்ட் மற்றும் யுடிஎஸ் செயலிகளின் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் உள்நுழையும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே தகவல் அமைப்பு மைய குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய ரயில்வே டிஜிட்டல் மையமாக்கும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
🚨#RailOne App of Indian Railways is now LIVE!📱
— PIB India (@PIB_India) July 1, 2025
RailOne is a one-stop solution for all passenger services. The App offers ease of access for services like ⬇️
✦ Reserved & Unreserved Tickets
✦ Platform Tickets
✦ Enquiries about Trains
✦ PNR
✦ Journey Planning
✦ Rail Madad… pic.twitter.com/rtorI0cREO
தற்போது உள்ள நவீன பயணிகள் முன்பதிவு அமைப்பை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். நவீனமையமாக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வருகிறது. இது, நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவுகளையும் 40 லட்சம் விசாரணைகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.





















