Rahul Gandhi: காப்பீடு ஓகே, இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
Rahul Gandhi: ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிவீர் திட்டம் தொடர்பாக, ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Rahul Gandhi: காப்பீட்டிற்கும், இழப்பீட்டிற்கும் வித்தியாசம் இருப்பதாக, ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
அக்னிவீர் திட்டத்தின் மீதான சர்ச்சை:
அக்னிவீர் திட்டத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த அஜய் குமார் என்பவர், குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். ஆனால், அவரது குடும்பத்தினருக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். அதற்கு பதிலளித்த ராணுவம், அஜய் குமார் குடும்பத்தினருக்கு 98 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியான குற்றச்சாட்டுகள் உண்மை இல்ல என விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் தான் ராணுவத்தின் அறிக்கை தொடர்பாக ராகுல் காந்தி புதிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
ரூ.1 கோடி எங்க?
அக்னிவீர் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அஜய் குமாரின் தந்தையும் இடம்பெற்றுள்ளார். அவர் பேசுகையில், ”தனது குடும்பம் ஒரு தனியார் வங்கியிலிருந்து ரூ 50 லட்சத்தையும், ராணுவக் குழுவின் காப்பீட்டு நிதியிலிருந்து ரூ 48 லட்சத்தையும் பெற்றோம். தியாகிகளின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார். எங்களுக்கு அது கிடைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
शहीद अग्निवीर अजय कुमार जी के परिवार को आज तक सरकार की ओर से कोई Compensation नहीं मिला है।
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2024
‘Compensation’ और ‘Insurance’ में फर्क होता है, शहीद के परिवार को सिर्फ बीमा कंपनी की ओर से भुगतान किया गया है।
सरकार की ओर से जो सहायता शहीद अजय कुमार के परिवार को मिलनी चाहिए थी वो… pic.twitter.com/FG99h72rhX
இழப்பீடு வேறு, காப்பீடு வேறு - ராகுல் காந்தி:
தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகயில், “தியாகி அக்னிவீரன் அஜய் குமாரின் குடும்பத்திற்கு இதுநாள் வரை அரசிடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை. 'இழப்பீடு' மற்றும் 'காப்பீடு' இடையே வேறுபாடு உள்ளது. தியாகியின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் தான் பணம் செலுத்தியுள்ளது. நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யும் ஒவ்வொரு தியாகிகளின் குடும்பமும் மதிக்கப்பட வேண்டும் ஆனால் மோடி அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அரசு என்ன சொன்னாலும் தேச பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக நான் கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பேன்.
ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - ராகுல் காந்தி:
ஆயுதப் படைகளை பலவீனப்படுத்த இந்திய கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவில் இரண்டு வகையான தியாகிகள் உள்ளனர் - சாதாரண ஜவான்கள் மற்றும் அக்னிவீரர்கள். இருவரும் தியாகிகளாக இருப்பார்கள், ஆனால் ஒருவர் தியாகி அந்தஸ்தைப் பெறுவார், மற்றவர் தியாகி அந்தஸ்தைப் பெறமாட்டார். ஒருவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும், மற்றவருக்கு கிடைக்காது. ஒருவருக்கு கேண்டீன் (வசதி) கிடைக்கும், மற்றவருக்கு கிடைக்காது” என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
காங்கிரஸ் கோரிக்கை:
இதனிடையே, குறுகிய கால ராணுவ ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டம் குறித்து "வெள்ளை அறிக்கையை" வெளியிட வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது, இதன் மூலம் இந்த திட்டத்தின் உண்மை நிலையை மக்கள் அறிவார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.