PM Modi Interview: 2047-இல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது : பிரதமர் மோடி உறுதி
2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது எனவும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது எனவும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது:
''விரைவில் இந்தியா உலகின் சிறந்த 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளும் வகையில், வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க இந்தியர்களுக்கு இன்று பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தீவிரவாதிகள் டார்க் நெட், மெட்டே வெர்ஸ், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைத் தங்களின் தீய நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவை நாடுகளின் சமூக கட்டமைப்பில் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
சைபர் அச்சுற்றுத்தல்களை நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இணைய பயங்கரவாதம், ஆன்லைன் தீவிரமயமாக்கல், பணமோசடி ஆகியவை இதன் உதாரணங்கள் ஆகும்.
பசித்த 100 கோடி வயிறுகளைக் கொண்ட நாடாகப் பார்க்கப்பட்ட இந்தியாவில் தற்போது, 100 கோடி உத்வேக மனங்களும் 200 கோடி திறன்வாய்ந்த கைகளும் இருக்கின்றன. 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நம்முடைய தேசிய வாழ்வில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இடமிருக்காது.
We have democracy, demography and diversity and we have now added fourth 'D' i.e. development: PM Modi to PTI
— Press Trust of India (@PTI_News) September 3, 2023
இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாடு தொடர்பான பணிகளுக்கு சுமார் 1.5 கோடி இந்தியர்கள் பங்காற்றி இருக்கின்றனர். ஜி 20 தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுக்கு ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு தருவோம்.
நம்மிடம் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்மைத்துவம் (democracy, demography and diversity) ஆகிய மூன்று 'D'க்கள் இருக்கின்றன. நான்காவதாக, வளர்ச்சியை (development) சேர்த்திருக்கிறோம். பொறுப்பற்ற நிதிக் கொள்கைகளால், ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுகின்றனர்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் 2047 எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, ‘’நம் மக்களின் வாழ்க்கைத் தரம் சிறந்த நிலைக்குச் சமமாக இருக்கும். இயற்கை மற்றும் கலாச்சாரம் இரண்டிலும் அக்கறை செலுத்திக்கொண்டே இதை அடைய முடியும்’’ என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம் வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த அணுகுமுறை, 21ஆம் நூற்றாண்டுக்குப் போதுமானதாக அமையாது என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாம்: Parliament Special Session: கேள்வி நேரமும் இல்லை, தனிநபர் பிரச்சனையும் பேசக்கூடாது.. புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!