”முஸ்லிம்களிடம் காய்கறி வாங்காதீர்கள்; ஆட்டோவில் ஏறாதீர்கள்” : பாதிரியாரின் வெறுப்புப் பேச்சை எதிர்த்த கன்னியாஸ்திரிகள்..
4 பேரும் ஏற்கெனவே கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழகில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள், அவர்கள் ஓட்டும் ஆட்டோக்களில் ஏறாதீர்கள் என்றெல்லாம் வெறுப்பைக் கக்கி பிரசங்கம் செய்த பாதிரியாருக்கு கன்னியாஸ்திரிகள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கேரள மாநிலம் பாலா பகுதி பிஷப் ஜோசப் கல்லரங்கட் நார்கோடிக் ஜிஹாத் என்று விமர்சித்துப் பேசிய வெறுப்புப் பேச்சின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை அதற்குள் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் 4 பேர் மற்றுமொரு கிறிஸ்தவ பாதிரியார் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சைக் கொட்டியுள்ளதாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நேற்று செப்டம்பர் 13-ஆம் தேதி அந்த 4 கன்னியாஸ்திரிகளும் செய்தியாளர்களை சந்தித்தனர். இவர்கள் 4 பேரும் ஏற்கெனவே கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழகில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனுபமா, ஆல்ஃபி, அன்கிட்டா உரும்பில், ஜோஸ்ஃபின் உள்ளிட்ட அந்த 4 கன்னியாஸ்திரிகளும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் குருவிலங்காடு புனித பிரான்சிஸ் மிஷன் தேவாலயத்தில் கடந்த ஞாயிறு அன்று வழக்கமான பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அதில் ராஜீவ் என்ற பாதிரியார் பிரசங்கம் செய்தார். அவரது பிரசங்கம் முஸ்லிம்களை சிறுமைப்படுத்துவதாக இருந்தது.
அவரது பேச்சின் மதவாதம் இருந்தது. அவர் முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள் என்றார். அவர்கள் ஓட்டும் ஆட்டோரிக்ஷாவில் ஏற வேண்டாம் என்றார். எங்களில் இருவர் அன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறுனோம். கர்த்தர் அனைவரிடத்திலும் அன்பு காட்டவெ சொல்லியிருக்கிறார். அண்டைவீட்டாரை நேசிக்கச் சொல்லியிருக்கிறார். மதவாதத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறியதற்கு மாற்றாக பாதிரியார் பிரசங்கம் செய்ததால் நாங்கள் இப்போது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி கல்லரங்கட் பேராயர் தனது பிரசங்கத்தில் முஸ்லிம்கள் பிற மதத்தினர் மத்தியில் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி நார்காட்டிக் ஜிஹாத்தில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார். இந்தப் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளானது. இதில் தலையிட்ட முதல்வர் பினராயி, போதைப் பொருளுக்கு யாரும் மதச்சாயம் பூச வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஷன், குற்றங்களுக்கு சாதி, மத, பாலின அடையாளம் கிடையாது. அதனால் எந்த ஒரு குற்றத்துக்கும் மதச் சாயம் பூச வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.