மேலும் அறிய
NHAI Guidelines: டோல்கேட் காத்திருப்பு; புதிய வழிமுறைகள் அறிவிப்பு!
டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க புதிய வழிமுறைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
![NHAI Guidelines: டோல்கேட் காத்திருப்பு; புதிய வழிமுறைகள் அறிவிப்பு! NHAI planned for new guidelines in toll plaza in state NHAI Guidelines: டோல்கேட் காத்திருப்பு; புதிய வழிமுறைகள் அறிவிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/ca7e7d4f14a7957cb27fc40201c8befb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுங்கச்சாவடி
பயணத்தை எளிதாக்கவும், அதே நேரம் வேகமாகவும் மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை சுங்கச்சாவடிகளின் சேவை நேரத்தை குறைத்து, புதிய சில விதிமுறைகளை உருவாகியுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் பயணிகளுக்கு எந்த விதத்தில் பயணத்தை எளிமையாக்கும், இதனால் என்ன நன்மைகள் என்பதை தெரிந்துகொள்வோம்.
தேசிய நெடுஞ்சாலை துறை உருவாகியுள்ள சில புதிய வழிமுறைகள் :
- சுங்க சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்பதே முதல் நோக்கம் - அதன் அடிப்படையில் peak hours எனப்படும் வாகன கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களிலும், ஒரு வாகனம் பத்து நொடிகளுக்கும் குறைவாகவே சுங்க சாவடிகளில் காத்திருக்க வேண்டும்.
- வாகனங்கள் தொடர்ந்து சீராக சுங்கச்சாவடிகளை கடந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும், இதனால் பலநூறு மீட்டர் ஒன்றின்பின் ஒன்றாக வாகனங்கள் வரிசைகட்டி நிற்பது தவிர்க்கப்படும்
- ஃபாஸ்ட் டாக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏதேனும் ஒரு காரணத்தால் 100 மீட்டரையும் தாண்டி வாகனங்கள் வரிசை கட்டி நின்றால், வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல அனுமதிக்கப்படும். ( 100 மீட்டர் உள்ளே வாகனங்களின் வரிசை வரும் வரை )
- இதை உறுதி செய்ய மஞ்சள் நிற கோடு ஒவ்வொரு சுங்கச்சாவடியில் இருந்தும் 100 மீட்டர் தொலைவில் வரைய பட்டிருக்கும், அதுவரை நிற்கும் வாகனங்களுக்கு சுங்க வரிவிலக்கு வழங்கப்படும்
- இதனால் சுங்க சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கவனத்துடன் பணியாற்றுவார்கள்
மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலை கணக்கில்கொண்டு சுங்கச்சாவடிகளை புதிய முறையில் வடிவமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion