Vande Bharat Train: அட இது நல்லா இருக்கே.! வந்தே பாரத் ரயில்களின் முன்பதிவில் புதிய வசதி - என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில்களில், முன்பதிவில் புதிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது என்ன என்பது தெரியுமா.?

வந்தே பாரத்தி ரயில்கள் வேகம் மற்றும் வசதிகளுக்காக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், ரயில் பயணிகளின் வசதிக்காக, குறிப்பிட்ட சில வந்தே பாரத் ரயில்களில், கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“வந்தே பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம்‘‘
பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குறிப்பிட்ட சில வந்தே பாரத் ரயில்களில், கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அந்த வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக, அந்த ரயிலில் இருக்கும் காலி இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும். அந்த இடங்களுக்கு பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த புதிய முன்பதிவு வசதி, 8 வந்தே பாரத் ரயில்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.
“15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யக்கூடிய 8 வந்தே பாரத் ரயில்கள் எவை.?“
- சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயில்(20677).
- சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்(20627).
- நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில்(206628).
- கோயம்புத்தூர் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே வாரத் ரயில்(20642).
- மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில்(20671).
- மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் வந்தே பாரத் ரயில்(20631).
- திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் வந்தே பாரத் ரயில்(20632).
- மங்களூரு சென்ட்ரல் - மட்காவ் வந்தே பாரத் ரயில்(20646).
மேற்கண்ட 8 வந்தே பாரத் ரயில்களில், அந்தந்த ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக, அதில் உள்ள காலி இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அப்போது, அந்த இடங்களுக்கான டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சில ரயில்களில் நாம் செல்லும்போது, கடைசி நேரத்தில் பயணி டிக்கெட்டை ரத்து செய்திருந்தால், யாருக்கும் பயனில்லாமல் அந்த இடம் காலியாவே இருப்பதை நாம் பார்த்திருப்போம். டிடிஆர் இடம் கேட்டுக்கொள்ளலாம் என்று ரயிலில் ஏறிவிடும் பயணிகளுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த சூழலை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதி, அனைத்து ரயில்களுக்குமே விரிவாக்கம் செய்யப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும். தெற்கு ரயில்வே செய்யுமா.?





















