Watch Video: இதுக்குக்கூட நிதி ஒதுக்க மாட்டீங்களா? - கொந்தளித்த எம்.பி., மாணிக்கம் தாகூர்
தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் நிலையில், எதிர்கட்சிகளின் எதிர்ப்பு எந்த மாதிரி இருக்கும், வெற்றியை வைத்து பாஜக எந்த மாதிரியான பதிலடி தரும் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
![Watch Video: இதுக்குக்கூட நிதி ஒதுக்க மாட்டீங்களா? - கொந்தளித்த எம்.பி., மாணிக்கம் தாகூர் MP Manickam Tagore speech in budget parliament session Watch Video: இதுக்குக்கூட நிதி ஒதுக்க மாட்டீங்களா? - கொந்தளித்த எம்.பி., மாணிக்கம் தாகூர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/9bed7d6968c0d13c3d7ac19102e65146_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. தேர்தலுக்குப் பின் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்திக்கும் கூட்டம் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி மாணிக்கம் தாகூர், ”மத்திய அரசிடம் போதுமான தரவுகள் இல்லை என மத்திய அமைச்சர் சொல்லி இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. நாட்டில் உள்ள குழந்தை தொழிலாளர் பற்றிய தரவுகள் இல்லை என சொல்வது சரியல்ல. முக்கியமான ஒன்றைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். NCLP எனப்படும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை. 2016-ம் ஆண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நிதி எப்போது வழங்கப்படும் என்பதை கேட்க கடமைப்பட்டுள்ளேன். இது குறித்து மத்திய அமைச்சகள் பதில் அளிக்கம் என நினைக்கிறேன். கோவை, விருதுநகர், தர்மபுரி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையாக 400 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சிறிய தொகையை வழங்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது வருத்தமளிக்கிறது.” என தெரிவித்திருக்கிறார்.
வீடியோவைக் காண:
கடந்த கூட்டத்தொடரில், 5 மாநில தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கு பாஜகவும் பதிலடி அளித்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நிறைவடைந்த நிலையில், இம்முறை எதிர்கட்சிகளின் எதிர்ப்பு எந்த மாதிரி இருக்கும், வெற்றியை வைத்து பாஜக எந்த மாதிரியான பதிலடி தரும் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் மக்களவைக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்ற பாஜக எம்.பி.க்கள்!https://t.co/wupaoCQKa2 | #NarendraModi #LokSabha #BJP pic.twitter.com/pHkHJedSqH
— ABP Nadu (@abpnadu) March 14, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)