மேலும் அறிய

Google Maps: வேலையை காட்டிய கூகுள் மேப், தவறான இடத்தில் நுழைந்த போலீசார் - அடித்து துவைத்த பொதுமக்கள்

Google Maps: கூகுள் மேப்பால் வழிதவறிய போலீசாரை, பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கிய சம்பவம் நாகாலாந்தில் அரங்கேறியுள்ளது.

Google Maps: சாதாரண உடையில் இருந்த அசாம் போலீசார் கூகுள் மேப்பால் வழிதவறி, நாகாலாந்து மாநிலத்திற்குள் நுழைந்தபோது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

வேலையை காட்டிய கூகுள் மேப்:

அசாம் மாநில காவல்துறையை சேர்ந்த 16 பேர் கொண்ட குழு, கூகுள் மேப்ஸின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குற்றவாளியை தேடி பயணித்துள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அசாம் போலீசார் நாகாலந்து மாநில எல்லைக்குள் நுழைந்தனர். சீரூடையில் இல்லாமல் சாதாரண உடையில் ஆயுதம் ஏந்தி இருந்த போலீசாரை கண்டு, உள்ளூர்வாசிகள் திருடர்கள் என தவறாக கருதியுள்ளனர். இதைதொடர்ந்து, பொதுமக்கள் திரண்டு அசாம் போலீசாரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி, சிறைப்பிடித்த சம்பவம், மொகோக்சுங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு  அரங்கேறியுள்ளது. இறுதியில் நாகாலாந்து காவல்துறையினரால் அசாம் காவலர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

நடந்தது என்ன?

குற்றவாளியை துரத்தி சென்றபோது, நாகாலாந்தில் இருந்த தேயிலைத் தோட்டத்தை, அசாம் எல்லையில் இருப்பதாக கூகுள் மேப்ஸ் தவறாகக் காட்டியதால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 16 பணியாளர்களில், மூன்று பேர் மட்டுமே சீருடையில் இருந்தனர், மீதமுள்ளவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். இது உள்ளூர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் தாக்கியதில், அசாம் காவலர் ஒருவர் காயமடைந்தார்” என அம்மாநில காவல்துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

உண்மை தெரிந்தது எப்படி?

தங்கள் மாநில போலீசார் எல்லை தாண்டி சென்று சோதனை நடத்துவது குறித்து தகவல் அறிந்ததும், அசாம் போலீசார் நாகாலாந்தில் உள்ள அவர்களது சக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாகாலாந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசாம் போலீசாரை மீட்டனர். போலீசாரை தடுத்து வைத்திருந்ததை உணர்ந்த உள்ளூர் மக்கள், முதலில் ஐந்து பேரையும், மீதமுள்ள 11 பேரை மறுநாள் காலையும் விடுவித்துள்ளனர். கூகுள் மேப்பால் போலீசார் வழிதவறி சென்று, பொதுமக்களிடம் சிக்கி தாக்குதலுக்கு ஆளான சம்பவம், அசாம் மற்றும் நாகாலாந்து மாநில போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, கூகுள் மேப்பால் வழிதவறி சென்று மோசமான பகுதிகளில் சிக்கிக் கொள்வது, நீர்நிலைகளில் விழுவது, பாலத்தில் இருந்து கவிழ்வது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதன் நீட்சியாக தான் போலீசாரே வழிதவறி சென்று சிக்கலில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK Alliance

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget