பயனுள்ள சில வீட்டுக் குறிப்புகள்!
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
பாத்ரூமில் பாசி படிந்திருக்கிதா? கோல மாவு அல்லது சுண்ணாம்பு கல்லை கரைத்து பாசி மேல் பூசி, அரை மணி நேரம் கழித்து தேய்த்துக் கழுவினால் பாத்ரூம் பளிச்சிடும்.
சமையல் பாத்திரங்கள் அலசும் நீரில் கொஞ்சம் வினிகர் கலந்து கழுவி னால் பாத்திரங்களும் பளிச்சிடும். நம் கைகளும் மென்மையாக இருக்கும்.
புதிய பெல்ட்டில் மேலும் சிலதுளை கள் தேவையா? தடிமனான ஊசியை பழுக்கக் காய்ச்சி வேண்டிய இடத்தில் குத்தினால் சுலபமாகதுளை உண்டாகும்.
வாடிப்போன கொத்தமல்லி தழையை வெது வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் பசுமையாக மாறும்.
ஆம்லெட் ஊற்றிய வாணலியை உப்பால் தேய்த்துக் கழுவினால் நாற்ற மில்லாமல் சுத்தமாகும்.
காபி டிக்காஷன் மீந்துவிட்டால் அதில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து வைத்தால் மறுநாள் உபயோகிக்கும் போது புது டிக்காஷன் போலவே இருக்கும்.
உருளைக்கிழங்கு பொரியல் செய் யும் போது, கொஞ்சம் பயத்தம் மாவை கரைத்து தெளித்தால் பொரியல் மொற, மொறப்பாக இருக்கும்.
முட்டையோடுகளையும், டீத்தூள் சக்கையையும் சேர்த்து வெயிலில் நன்றாக காயவைத்து அதை ரோஜா செடிகளுக்கு உரமாகப் போட்டால் பெரிய பூக்களாக பூக்கும்.
காட்டன் புடவைகளுக்கு கஞ்சி போடும்போது நீரில் கொஞ்சம் படிகாரம் சேர்த்தால் புடவை நல்ல வெண்மையாக, பளபளப்பாக இருக்கும்.