Pushpak Express : பரவிய வதந்தி! உயிருக்கு பயந்து.. உயிரை விட்ட பயணிகள்! மகாராஷ்டிராவில் சோகம்
Jalgaon Train accident : மகராஷ்டிராவில் ரயிலில் பரவிய வதந்தியால் ரயில் பயணிகள் உயிரைவிட்ட நிகழ்வு சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் அருகே ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதால், பயணிகள் பலர் ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது, அருகே இருந்த தண்வாளத்தில் வந்த மற்றொரு ரயில் மோதிய சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
புஷ்பக் ரயில் விபத்து:
மகாராஷ்டிரா மாநிலம் பச்சோரா ரயில் நிலையம் அருகே புஷ்பக் விரைவு ரயில் சென்று கொண்டு இருந்தது, அப்போது ரயிலில் தீப்பற்றியதாக வதந்தி பரவியது இதனால் ரயிலில் உள்ள அபாய சங்கிலி இழுக்கப்பட்டது ரயில் நின்றது.
இதையும் படிங்க: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்... பேருந்தில் இருந்து இறங்கி டிரைவர் செய்த வேலை
தீ பரவியது என்கிற வதந்தியால் ரயிலில் இருந்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே இறங்கினர். ஆனால் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த தண்டவாளத்தில் கர்நாடகா விரைவு ரயில் தண்டவாளத்தில் இருந்த பயணிகள் மீது வேகமாக மோதியது.
VIDEO | At least six persons were killed after they stepped down from their train on the tracks and were run over by another train coming from the opposite direction in North Maharashtra's Jalgaon district on Wednesday evening.
— Press Trust of India (@PTI_News) January 22, 2025
Visuals from the spot near Pachora station, where… pic.twitter.com/EKQU5LE50w
இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 40 பயணிகள் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு கூடுதல் எஸ்.பி, எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் விரைந்து வருகின்றனர். மேலும் ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பகுதிக்கு இது வரை 8 ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளதால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.






















