Kashmir Encounter: காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை...பாதுகாப்பு படையினர் அதிரடி!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேர் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jammu & Kashmir Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேர் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே மச்சில் என்ற பகுதியில் பயங்கரவாதிகளை இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததை அடுத்து, மாநில காவல்துறையும், ராணுவமும் இணைந்து அங்கு சென்று தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்த நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, அதே பகுதியில் மேலும் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
#KupwaraEncounterUpdate: Three (03) more #terrorists of LeT killed (Total 05). Identification being ascertained. Search #operation in progress. Further details shall follow: ADGP Kashmir@JmuKmrPolice https://t.co/qOMWE0M3uh
— Kashmir Zone Police (@KashmirPolice) October 26, 2023
இதுவரை 46 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை:
இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ள 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் பயங்கரவாதிகளைவிட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 130 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், இவர்களில் பாதி பேர் வெளிநாட்டவர்ள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 4ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள குட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. குட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்கள் என்று தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் குட்காம் பகுதிக்கு சென்றனர். அங்கு குஜ்ஜார் பகுதியில் சம்பவத்தன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அம்மாநில காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க