ISRO: பயன்படுத்த முடியாது.. செயற்கைகோள்கள் பயனிழந்தன - இஸ்ரோ அறிவிப்பு
2 செயற்கைக்கொள்களும் பயனிழந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பயனிழந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணிநேர கவுண்ட் டவுன் முடிந்த நிலையில் சரியாக 9.18 மணிக்கு 2 செயற்கைக் கோள்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
SSLV-D1/EOS-02 Mission: the launch is scheduled at 9:18 am (IST). Watch LIVE from 08:30 am here: https://t.co/V1Bk6GZoCF pic.twitter.com/ZTYo8NFXac
— ISRO (@isro) August 7, 2022
இஓஎஸ் 02, ஆஸாதிசாட் என்ற எடை குறைந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் இந்த எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் முன்னதாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் இந்த 2 செயற்கைக்கொள்களும் பயனிழந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.செயற்கைக்கொள்கள் வட்டப்பாதைக்கு பதிலாக நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால் பயனிழந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்
(1/2) SSLV-D1/EOS-02 Mission update: SSLV-D1 placed the satellites into 356 km x 76 km elliptical orbit instead of 356 km circular orbit. Satellites are no longer usable. Issue is reasonably identified. Failure of a logic to identify a sensor failure and go for a salvage action
— ISRO (@isro) August 7, 2022
பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்: ஆஸாதிசாட் செயற்கைக் கோளை 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கூட்டு உழைப்பில் உருவாக்கியுள்ளது. 8 கிலோ எடை கொண்ட ஆஸாதிசாட்டில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்ஃபி கேமரா உள்ளது. 142 கிலோ எடை கொண்ட EOS - 02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது. பிஎஸ் எல்வி, ஜிஎஸ் எல்வி போன்று முதன்முறையாக இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளது. இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்