iPhone 11, iPhone 12: எதிர்பார்க்காத அளவு விலை குறைப்பு..! அடித்தது ஜாக்பாட்..!
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் 2020 இல் வெளியிடப்பட்ட மொபைல் ஃபோன் மாடல்களில் விலையை குறைத்து உள்ளது.
ஆப்பிளின் ஐபோன் 13 சீரீஸ் உடன் சேர்த்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மற்றும் புதிய 10.2- இன்ச் ஐபேட் மற்றும் புதிய ஐபேட் மினி போன்ற தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
புதிய ஐபோன் 13 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட உடன், ஆப்பிள் நிறுவனம் அதன் பழைய ஐபோன் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்கள் அறிவிக்கப்பட்டதும் இது போன்று விலை குறைப்பை அறிவிக்கும்.
அப்படியான ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் "நடவடிக்கையின்" கீழ் ஐபோன் 11, ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களின் இந்திய விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் தளங்களான Amazon மற்றும் Flipkart- இல் இந்த விலை குறைப்பு உள்ளது.
இருப்பினும் மொபைலின் வண்ணம் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து விலைகள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐபோன் 12:
iPhone 12 - 64 Gb இன் கருப்பு நிறம்: Flipkart- இல் ₹59,999 -க்கு பெறலாம்.
iPhone 12 - 64 Gb இன் ஊதா நிறம்: Flipkart- இல் ₹60,4999 -க்கு பெறலாம்.
iPhone 12 – 128 Gb இன் கருப்பு நிறம்: Flipkart- இல் ₹64,499 -க்கு பெறலாம்.
iPhone 12 - 128 Gb இன் கருப்பு நிறம்: Amazon இல் ₹63900 -க்கு பெறலாம்.
iPhone 12 - 128 Gb இன் ஊதா நிறம்: Amazon இல் ₹70,900 –க்கு பெறலாம்.
ஐபோன் 12 மினி:
iPhone 12 மினி - 64 Gb இன் கருப்பு, வெள்ளை நிறம்: Amazon இல் ₹49,999 -க்கு பெறலாம்.
iPhone 12 மினி - 64 Gb இன் ஊதா நிறம்: Amazon இல் ₹53,900 -க்கு பெறலாம்.
iPhone 12 மினி - 64 Gb இன் பச்சை நிறம்: Amazon இல் ₹59,900 -க்கு பெறலாம்.
iPhone 12 மினி – 128 Gb இன் சிவப்பு நிறம்: Amazon இல் ₹54,999 -க்கு பெறலாம்.
iPhone 12 மினி – 128 Gb இன் பச்சை நிறம்: Amazon இல் ₹64,900 -க்கு பெறலாம்
இந்த போனின் அடிப்படை விலை ₹69,900 ஆகும்.
iPhone 11 - இந்த மாடலின் 64Gb தள்ளுபடி விலையில் ₹49,900 மற்றும் 128Gb ₹54,999 விலையில் Flipkart இல் பெறலாம்.