(Source: ECI/ABP News/ABP Majha)
Indore Temple Collapse: இந்தூர் கோயிலில்விபத்து: கிணற்றில் 25 பேருக்கு மேல் சிக்கித் தவிப்பு
இந்தூர் கோயிலில் உள்ள கிணற்றினைச் சுற்றி கட்டப்பட்ட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர், ஸ்ரீ பெலிஸ்வர் மகாதேவ் கோயிலில் உள்ள கிணற்றை மூடி கட்டப்பட்ட காங்கிரட் தளம் இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராம நவமியை முன்னிட்டு இன்று அதிகப்படியான பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்துள்ளதால், காங்கிரட் தளம் பாரம் தாங்கமுடியாமல் இடிந்து விழுந்துள்ளது. மக்களை மீட்கும் பணி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 8க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், கோவிலில் உள்ள சுவரை ஜேசிபி மூலம் உடைத்து பக்தர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.
இந்தூர் பாஜக எம்பி ஷங்கர் லால்வானி ஏபிபி நியூஸிடம் பேசுகையில், "விபத்து நடந்த இடத்தில் நிர்வாகக் குழுக்கள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் எங்கள் நோக்கமாக உள்ளது. கோயில் மிகவும் பழமையான கோயில் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதை விபத்துக்கு சொல்வது கடினம். மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தாலும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார்.
#WATCH | Madhya Pradesh: Many feared being trapped after a stepwell at a temple collapsed in Patel Nagar area in Indore.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 30, 2023
Details awaited. pic.twitter.com/qfs69VrGa9
சம்பவ இடத்துக்கு வந்த பேரிடர் மேலாண்மை நிபுணர் அஞ்சலி குவாத்ரா கூறுகையில், ஒவ்வொரு முறையும் மத வழிபாட்டுத் தலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதை அரசு ஆராய வேண்டும். மேலும், "மீட்புப் பணியில் அர்சு விரைந்து செயல்பட்டு வருகிறது, நல்ல விஷயம்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் மத வழிபாட்டுத் தலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பது பெரிய கேள்வி? முக்கிய நாட்களில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும் அதற்காக ஏன் முன்கூட்டியே தயாராகக் கூடாது? விபத்து நடந்த இடம் மிகவும் குறுகலான இடம் என்றும் கூறினார்.