யாரெல்லாம் வாடகைத்தாய் முறைமூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்? : மருத்துவர்கள் பதில்
அவர்கள் வாடகைத்தாய் முறைமூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் என்கிற யூகம் வெளியானதும் அதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியர் தாங்கள் பெற்றோரானது குறித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் இரட்டைக் குழந்தைக்குப் பெற்றோர் ஆனதாக விக்னேஷ் சிவன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அவர்கள் வாடகைத்தாய் முறைமூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் என்கிற யூகம் வெளியானதும் அதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
View this post on Instagram
விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம்
இதற்கு யாரெல்லாம் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஜெயராணி காமராஜ். அவர் கூறுகையில் ”இந்தியாவில் திருமணமானவர்கள் அல்லது திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்கள் மட்டுமே வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு அதனைச் செய்பவர்களோ அல்லது தன்பாலீர்ப்பாளர்களோ, திருநங்கைகளோ அவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்வது இங்கே சட்டப்பூர்வமானதாக்கப்படவில்லை” என்கிறார்.
மேலும், "கரியர் முக்கியம் திருமணம் ஆனாலும் தனக்கு இப்போது குழந்தை வேண்டாம் 40 வயதுக்கு மேல்தான் என முடிவு செய்துவிட்டால் அதற்கு வேறு சில வழிகள் இருக்கின்றன. குறிப்பாக பெண்களின் முட்டையை ஃப்ரீஸ் செய்யும் சோஷியல் ஃப்ரீஸீங் முறை உள்ளது. இந்த முறை நமது நாட்டில் சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும்” என்கிறார் மருத்துவர் ஜெயராணி.
இரட்டைக் குழந்தைகள் பிறந்த முறை என்ன? வாடகைத்தாய் முறையா? என்பதை விக்னேஷ் சிவன் - நயன்தாரா தரப்பு இன்னும் உறுதி செய்யாத நிலையில் சோஷியல் மீடியாவில் பலர் இதற்கு எதிராகப் பொங்கி வருகின்றனர். இதற்கிடையே இதுகுறித்த விவரங்களை மருத்துவர் ஜெயராணி காமராஜ் பகிர்ந்துள்ளார்.