மேலும் அறிய
Advertisement
28.06.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு விதிகள்
- கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் பொதுப்போக்குவரத்து
- 27 மாவட்டங்களுக்கு உள்ளேயேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் காலை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.
- பேருந்துகளில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் – தமிழக அரசு.
- குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வழிபாட்டுத் தளங்களில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.
- சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று முதல் பெரிய அளவிலான துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்கப்படுகிறது.
- சுமார் இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த வணிகவளாகங்களும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் இன்று காலை முதல் நடைபயிற்சிக்கு அனுமதி.
- சென்னை, மெரினாவில் அதிகாலை முதல் நடைபயிற்சிக்கு மக்கள் குவிந்தனர்.
- பொதுமக்கள், வணிகர்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலே தளர்வுகள் அறிவிப்பு – அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முதல்வர் அறிவுறுத்தல்.
- தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா உறுதி.
- தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 159 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.
- மாநிலம் முழுவதும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக பதிவானது.
- சென்னையில் 308 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு. கோவையில் 649 பேருக்கு புதியதாக கொரோனா.
- இன்று முதல் மாநிலம் முழுவதும் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
- தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. தேர்வு குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை – தமிழக தலைமை செயலாளர் பங்கேற்பு
- ஐ.சி.எம்.ஆர்., மருத்துவ வல்லுனர்கள் குழு, பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தகவல்.
- தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- சென்னையில் நேற்று நள்ளிரவில் கனமழை. சென்னையில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.
- சென்னை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2வது கொள்ளையன் சிறையில் அடைப்பு.
- தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயற்சி – காவல் உதவி ஆணையர் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு.
- நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் – மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்.
- தமிழ்மொழி மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது. தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி- பிரதமர் மோடி.
- டெல்லியில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion