Agnipath Protest: வன்முறையாக வெடித்த அக்னிபத் போராட்டம்... பீகார், ஹரியானாவில் இணையதள சேவை ரத்து
அக்னிபத் போராட்டம் காரணமாக பீகார், உத்தர பிரதேச பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவதால் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை கையாள தொடங்கியுள்ளது.
அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் இளைஞர்கள் மத்தியில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Haryana govt orders suspension of mobile internet services, all SMS services in view of potential law and order situation in the wake of new army recruitment policy. Order shall be in force for next 24 hours with immediate effect i.e. till 16:30 hours (tomorrow) pic.twitter.com/eoMsa9HQgx
— ANI (@ANI) June 17, 2022
இத்திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது விகிதம் குறைக்கப்பட்டு ஓய்வூதியத்திற்கான செலவு குறைக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு போராட்டம் விரிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்