”ஆக்சிஜனுக்காக உழைத்தவர் மூச்சுத்திணறினார்” : சூழலியலாளர் சுந்தர்லால் பஹுகுணாவை நினைவுகூர்கிறேன்
கடந்த 21-ஆம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாவலர் சுந்தர்லால் பஹுகுணா கொரோனா தொற்று பாதிப்பு காரணம் உயிரிழந்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2-ஆம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாவலர் சுந்தர்லால் பஹுகுணா கொரோனா தொற்று பாதிப்பு காரணம் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பலர் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இவர் குறித்து கட்டுரையாளர் வினேய் லால் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், “கொரோனா பெருந்தொற்று கடந்த 21-ஆம் தேதி ஒரு சிறந்த உயிரை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது. ஒரு சமுதாய செயற்பாட்டாளர், சுற்றுச்சூழல் பாதுகாவலர், சிப்கோ இயக்கத்தை பிரபலப்படுத்தியவருமான சுந்தர்லால் பஹுகுணா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவர் நோய்த்தொற்று காரணமாக மே 8-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார், கடைசியில் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். இவருடைய இறப்பு இந்தியாவின் சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. ஏனென்றால் இவர் காந்தியவாதியாகவும் தன்னுடைய போராட்டங்களை முன்னெடுத்தார்.
1986-ஆம் ஆண்டு நான் முதல் முறையாக அவரை நேரில் சந்தித்தேன். நான் அவரை சந்தித்தது என்னுடைய நினைவில் அழியாமல் உள்ளது. எனினும் அந்தத் தேதி சரியாக நியாபகமில்லை. 1989-ஆம் ஆண்டு ராமச்சந்திர குஹா சுற்றுச்சூழல் தொடர்பாக தன்னுடைய புத்தக்கத்தை வெளியிடுவதற்கு முன்பாக நான் சுந்தர்லாலை நேரில் சந்தித்தேன். சிப்கோ இயக்கம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது நான் சுந்தர்லாலுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்த சமயத்தில் தொலைபேசி, இணையதளம் எதுவும் இல்லை. நான் எழுதிய கடித்ததிற்கு அவர் பதில் கடிதம் எழுதினார். அதில் அவர் அடுத்த வாரம் டெல்லி வருவதாக கூறியிருந்தார். அவர் மீண்டும் உத்தரக்காண்ட் திரும்பும் பொது அவருடம் என்னை வரும்படி அழைத்தார். நானும் அவருடன் சென்று உத்தரக்காண்ட் பகுதியிலுள்ள அவருடைய ஆஷ்ரமத்தில் தங்கினேன்.
அப்போது அங்கு சென்றவுடன் மலை பாதையில் என்னால் வேகமாக ஏற முடியவில்லை. என்னைவிட இரண்டு மடங்கு அதிக வயதான சுந்தர்லால் மிகவும் எளிதாக வேகமாக ஏறினார். மலைப்பகுதியில் வாழ்ந்து வந்ததால், அவர் எவ்வளவு பலமாக இருந்தார் என்று அன்று நான் உணர்ந்தேன். அவருடைய ஆஷ்ரமத்திற்கு சென்றவுடன் அவருடைய மனைவி விமலா எங்களை உபசரித்தார். அங்கு அரிசி மற்றும் கோதுமை உணவுகள் இல்லை. வாற்கோதுமை(பார்லி), தினை போன்றவை தான் பரிமாறப்பட்டது. ஏனென்றால் எளிய மக்களுக்கு அப்போது அரிசி மற்றும் கோதுமை மிகவும் விலை உயர்ந்த உணவாக இருந்தது. இதனால் அவர்களும் எளிய மக்களில் ஒருவராக இந்த உணவு பழக்கத்தை கடைபிடித்தனர். அத்துடன் இந்த பயிர்கள் மிகவும் குறைவான தண்ணீரை எடுத்துகொண்டு வளரும் என்பதையும் நான் அங்கு அறிந்து கொண்டேன். இது இயற்கை வளங்கள் அழியும் இடத்தில் பல ஆண்டுகள் தாங்கக்கூடிய நல்ல உணவு என்பதையும் அறிந்து கொண்டேன்.
சிப்கோ இயக்கத்தின் போது போராடிய மகளிர் கூட்டம் ஒரு முழக்கத்தை எழுப்பியது. அதாவது, “காடுகள் நமக்கு எதை தருகின்றன? மண்,நீர் மற்றும் சுத்தமான காற்றை தருகிறது” என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பியிருந்தனர். சுந்தர்லாலின் தொடக்கம் சிப்கோவில் ஆரம்பிக்கவில்லை. அவர் தனது சிறுவயது முதல் காந்தியவாதியாக இருந்தார். தன்னுடைய 20 வயதில் தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பினார். அத்துடன் மலைப்பகுதியில் உள்ள பெண்களை திரட்டி மதுப்பழக்கத்திற்கு எதிராக போராடினார். சிப்கோ இயக்கத்தின் போது மற்றொரு முக்கியமான முழக்கம் ஒன்று வெளியானது. அதை சுந்தர்லால் அளித்தார். அது, “சூழலியல் எப்போதும் அழியாத பொருளாதாரம்” என்பது தான். சிப்கோ இயக்கம் என்பது பெண்கள் மரம் சார்ந்த நிறுவனங்கள் மரங்களை வெட்ட விடாமல் கட்டியணைத்து காப்பாற்றியதால் வந்தது என்று பலர் நினைக்கின்றனர்.
ஆனால் அது உண்மையல்ல. சிப்கோ இயக்கம் என்பது கிரிக்கெட் மட்டை தயாரிக்க வந்தவர்களை உத்தரக்காண்ட் பெண்கள் தடுத்து மரங்களை கட்டி தழுவியதேயாகும். இந்த இயக்கும் மூலம் இந்தியாவில் பெண்கள் முன்னெடுப்புடன் பல சுற்றுச்சூழல் இயக்கம் தொடங்கியது. அதிகளவில் மரங்களை வெட்டினால் இயற்கைக்கு அழிவு ஏற்படும் என்பது கிராமப்புற மக்களுக்கு நன்றாக தெரியும். சுந்தலால் பஹுகுணாவும் இதை நன்கு அறிந்ததால் தான் இந்த இயக்கத்தை முன்னெடுத்தார்.
தன்னுடைய காலத்தில் சுந்தர்லால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் போராளியாக உருவெடுத்தார். 1981-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. எனினும் அதை ஏற்க மறுத்தார். பின்னர் 2009-ஆம் ஆண்டு இவருக்கு இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 1980களில் பிரதமர் இந்திரா காந்தி 15 ஆண்டுகளுக்கு மரங்களை வெட்டக்கூடாது என்று முடிவை அறிவித்தார். எனினும் அது உத்தரக்காண்ட் மாநிலத்தில் சரியாக கடைபிடிக்கப்படவில்லை. இதை எதிர்த்து இமாலய மலைப்பகுதி முழுவதும் சுந்தர்லால் பஹுகுணா நடைப்பயணம் மேற்கொண்டார். குறிப்பாக 5000 கிலோ மீட்டர் தூரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். அத்துடன் டெஹ்ரி அணையில் ஒரு பெரிய திட்டத்தை அரசு கொண்டு வர திட்டமிட்டது. இதற்காக பல இடங்களில் மக்களை மாற்றும் நிலை ஏற்பட்டது. அப்போது இந்தத் திட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். 1989-ஆம் ஆண்டு இதற்காக ஒரு உண்ணாவிர போராட்டத்தையும் அறிவித்தார்.
பஹுகுணா தன்னுடைய போராட்ட முறைகள் மூலம் காந்திய கொள்கைகளை கடைபிடித்தார். அவர் ஒரு அகிம்சை போராளியிடம் இருக்க வேண்டிய முக்கிய குணங்களை பெற்று இருந்தார். குறிப்பாக மக்களிடம் எவ்வாறு உரையாடுவது மற்றும் மக்களை அகிம்சை வழியில் போராட வைப்பது குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார். அத்துடன் காந்தி கூறுவதைப்போல் ஒரு சமூக போராளி அடையாளத்திற்காக போராடிவிட கூடாது என்பதற்கேற்ப இருந்தார். சுந்தர்லால் பஹுகுணா தன்னை முன்னிலைப்படுத்தியதே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இவருடைய பெயர் அதிகம் பேசப்படவில்லை. எனினும் இவை அவரை நிறுத்தவில்லை. அவர் தொடர்ந்து தன்னுடைய சமூக போராட்டத்தை முன்னெடுத்து கொண்டே இருந்தார். பஹுகுணா கிராமத்தில் பிறந்து அங்கே வளர்ந்தவர். அவர் டெல்லிக்கு வந்தாலும் மீண்டும் தனது கிராமத்தில் தங்கி இருப்பதையே விரும்பினார். அவரும் காந்தியை போன்று கிராமங்கள் அல்லாத வளர்ச்சியை ஏற்கவில்லை. மேலும் அவர் தன்னுடைய கண் முன்னால் பல கிராமங்கள் வளர்ச்சி காரணமாக அழிவதை பார்த்தார். அப்போது அவர் கூறியது ஒன்று தான். அது, “இந்தியாவின் உயர் இன்னும் கிராமங்களில்தான் உள்ளது” என்பதுதான்.
இவரையும் பல காந்தியவாதிகளையும் நாம் அதிகம் ரொமென்டிசைஸ் செய்கிறோம் என்று கருத்து பார்வையாளர்களுக்கு வரலாம். ஆனால் கிராமங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியை விரும்பியவர்களுக்கு இது நன்றாக தெரியும். அவர்களுக்கு தெரியும் எது தேவை, எது பயனுள்ளது என்று. இதனால் தான் சுந்தர்லால் டெஹ்ரி அணை திட்டத்தை எதிர்த்தார். சுந்தர்லால் தன்னுடைய தேவையைவிட அதிமாக பூமி,மண்,காற்று ஆகியவற்றிலிருந்து எதையும் எடுத்ததில்லை.
பஹுகுணா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆக்சிஜன் உருவாக்கும் மரங்கள் மற்றும் சுத்தமான காற்றுக்காக போராடியவர். மேலும் ஆக்சிஜன் தரத்தை மாசுப்படுத்தாமல் இருக்கவும் அவர் போராடி வந்தார். அவருக்கு 94 வயதில் இப்படி ஒரு முடிவு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆக்சிஜன் உருவாக்க போராடியவரை நாம் ஆக்சிஜனுக்காக மூச்சுச்திணற வைத்து உயிரிழக்க செய்துள்ளோம் என்பது எவ்வளவு பெரிய சமுதாய அவலம் என்பதை நாம் உணரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.