தொழில் கல்வியில் இன்ட்ரஸ்ட் இருக்கா? ஐடிஐ மாணவர்களுக்கு கவலை இல்ல.. இனி தமிழிலும் கத்துக்கலாம்!
தொழிற் கல்வி பயில்வதை மேலும் எளிதாக்கும் நோக்கில் தேசிய பயிற்றுவிப்பு ஊடக நிறுவனம் (NIMI), தமிழ் மொழியில் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது.
ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற் கல்வி பயில்வதை மேலும் எளிதாக்கும் நோக்கில் உயர் தரமிக்க திறன் பயிற்சி குறித்த வீடியோக்களை தமிழ் மொழியில் வழங்கும் விதமாக பிரத்யேக யூடியூப் அலைவரிசை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
ஐடிஐ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்:
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்திற்குட்பட்ட பயிற்சிப் பிரிவு தலைமை இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்றுவிப்பு ஊடக நிறுவனம் (NIMI), யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள கற்போருக்கு பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் ஆதார வளங்களை இலவசமாக வழங்கும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Huawei Mate XT: ட்ரை ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன்; ஹூவாய் நிறுவனம் அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்ன?
நிமி டிஜிட்டல் தமிழ், நிமி அமைப்பால் தொடங்கப்பட்ட 9 பிராந்திய மொழி அலைவரிசைகளில் ஒன்றாகும். தமிழ் பேசும் மாணவர்கள், பயிற்றுநர்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கில், தொழில்துறை சார்ந்த அம்சங்களை இலவசமாக வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தமிழ் மொழியில் யூடியூப் சேனல்:
இந்த இணையதளம் வாயிலாக, தங்களுக்கான தனிப்பயிற்சி, செயல் விளக்கங்கள் மற்றும் உரைநடைப் பாடங்களை கற்போர் தமிழில் எளிதில் அறிந்து கொள்ளலாம். இது, பல்வேறு தொழிற்சாலைகளில் புதிதாக உருவாகும் தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்கள் அவர்களது தொழிற்நுட்பத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்.
நிமி டிஜிட்டல் தமிழ் அலைவரிசையின் சிறப்பம்சங்கள்:
- தமிழில் உள்ள தொழிற்பயிற்சிப் பாடங்களை இலவசமாக, எளிதில் அணுகலாம்.
- உற்பத்தி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கியத் துறைகள் இதில் அடங்கும்.
- நவீன திறன் பயிற்சி முறைகள் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளை, கற்போர் உடனுக்குடன் அறிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும்.
இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள NIMI வலைதளத்தைக் காணவும் அல்லது யூடியூபில் NIMI டிஜிட்டலுக்கு சந்தாதாரர் ஆகவும்.
இதையும் படிக்க: அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன்