மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி

பயணிகள் பயணம் செய்யும்போது அந்த குழுவில் உள்ள ஒருவர் மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் ஒரே PNR (பயணச் சீட்டு) எண்ணின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும் போது, குழுவில் உள்ள ஒருவர் மட்டும் அசல் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதுமானது என்கிற புதிய விதியை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

புதிய அடையாள அட்டை விதிமுறை

புதிய விதியின் கீழ் ஒரே பி.என்.ஆர் (PNR) எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும்போது அந்த குழுவில் உள்ள ஒருவர் மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பயணச் சீட்டு பரிசோதகர்கள் ஒவ்வொரு பயணியிடமும் அடையாள அட்டையைக் காட்டும்டி கோர வாய்ப்பு இருந்தது. இது குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் குழுவாகப் பயணம் செய்பவர்களுக்கு தேவையற்ற காலதாமதத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தி வந்தது. பயணத்தை எளிதாக்கவும் ரயில் பயணத்தின் போது மேற்கொள்ளப்படும் சரிபார்ப்பு நடைமுறைகளைச் சீரமைக்கவும் இந்த மாற்றத்தை இரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு பயணிக்கு அடையாள அட்டை கட்டாயம்

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி ஒரே பயணச் சீட்டில் ஆறு பயணிகள் வரை பயணம் செய்யும்போது அவர்களில் குறைந்தது ஒருவராவது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு (Passport), பான் கார்டு அல்லது இதர அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றுகள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தப் புதிய நடைமுறை ஒரே முன்பதிவின் கீழ் டிக்கெட் எடுத்திருக்கும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள்:

  • ஆதார் கார்டு (Aadhaar Card)

  • வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)

  • கடவுச்சீட்டு (Passport)

  • பான் கார்டு (PAN card)

  • பிற அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகள்.

 

சரிபார்ப்பு நடைமுறை 

பயணச் சீட்டு பரிசோதகர்கள், குழுவில் உள்ள ஒருவரது அடையாள அட்டையைச் சரிபார்த்துவிட்டு, மற்ற பயணிகளையும் அங்கீகரிப்பார்கள். இருப்பினும், காட்டப்படும் அடையாள அட்டை உண்மையானதாகவும், செல்லுபடியாகும் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பவர்களுக்கும் இந்த மாற்றம் மிகுந்த வசதியை அளிக்கும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget