2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டுப் பட்டியல் எண்ணிக்கை ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் என இந்தியப் பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்சய் குமார் நாராயண், வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு:
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டுப் பட்டியல் எண்ணிக்கை ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும், இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனவும் இது முதல் கட்டத்தின் தொடக்கம் என்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்சய் குமார் நாராயண், வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று கூறினார்.
அதற்கு முன் மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் நியமனம் மற்றும் அவர்களிடையே பணிப் பகிர்வு ஆகியவை மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது/
எத்தனை கட்டமாக நடைப்பெறும்?
மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைப்பெற உள்ளது. இதில் முதல் கட்டத்தில் - முதல் கட்டத்தில் வீட்டுப் பட்டியல் நடவடிக்கை (HLO), ஒவ்வொரு வீட்டின் வீட்டு நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து சேகரிக்கப்படும்.
இரண்டாம் கட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் (PE), ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் மக்கள்தொகை, சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும், இது பிப்ரவரி 1, 2027 அன்று திட்டமிடப்பட்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக, 34 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதுவரை இந்தியாவில் 16 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு:
நடைப்பெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மொபைல் மூலம் நடத்தப்பட உள்ளது. மேலும் சுய கணக்கெடுப்பு வசதியும் மக்களுக்குக் கிடைக்கும். இந்த மக்கள் தொகைக்கணக்கெடுப்புக்கு மக்களிடம் கேட்க சுமார் முப்பது கேள்விகளைத் தயாரிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?
இந்த கணக்கெடுப்பில் , தொலைபேசிகள், இணையத்தள வசதி, வாகனங்கள் (சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன்) மற்றும் உபகரணங்கள் (ரேடியோ, டிவி, டிரான்சிஸ்டர்) போன்றவற்றின் உரிமை குறித்து வீடுகளிடம் கேட்கும்.
தானிய பயன்பாடு, குடிநீர் மற்றும் மின்சாரம், கழிப்பறைகளின் வகை, கழிவுநீர் அகற்றல் குறித்தும், குளியல் மற்றும் சமையலறை வசதிகள், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் மற்றும் LPG/PNG இணைப்பு குறித்தும் மக்களிடம் கேள்விகள் கேட்கப்படும்.
வீட்டின் தரை, சுவர்கள் மற்றும் மேல்தளத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அதன் நிலை, குடியிருப்பவர்களின் எண்ணிக்கை, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதிகளின் தகவல் மற்றும் வீட்டுத் தலைவர் ஒரு பெண்ணா அல்லது பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து கூடுதல் கேள்விகளும் இதில் அடங்கும்.























