Earthquake in Northeastern State: அசாம் மாநிலத்தில் கடுமையான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6 புள்ளிகள் பதிவு
நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6 புள்ளிகள் பதிவானது. இதனால் ஏராளமான கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டன
அசாம் மாநிலத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6 புள்ளிகள் பதிவானது. இதனால் ஏராளமான கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டன.
மாநிலத்தின் மிக முக்கிய நகரமான குவஹாத்தியிலிருந்து வடக்கே 140 கிமீ தொலைவில் உள்ள தேக்கியாஜுலி நகருக்கு அருகே 35 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், நிலநடுக்கம் தொடர்பாக அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் வுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்தர் .
அசாம், நாட்டின் அதிக நிலநடுக்க பாதிப்புக்கு ஆளாகக் கூடிய ( மண்டலம் 5)-ல் பகுதியாக அடையாளம் காணப்படுகிறது. ஐஎஸ் குறியீடு மண்டலம் 5 க்கு 0.36 என்ற மண்டல காரணியை ஒதுக்குகிறது. கட்டமைப்பு வடிவமைப்பாளர்கள் இந்த காரணியை மண்டலம் 5 இல் உள்ள பூகம்பத் தடுப்பு வடிவமைப்புகளுக்கு பயன்படுத்துகின்றனர். 0.36 இன் மண்டல காரணி (zone factor) இந்த மண்டலத்தில் பயனுள்ள (zero period) நிலை பூகம்பத்தை குறிக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, மேற்கு மற்றும் மத்திய இமயமலை, வடக்கு மற்றும் மத்திய பீகார், வடகிழக்கு இந்தியப் பகுதி, ரான் ஆஃப் கட்ச், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மண்டலத்தில் விழுகின்றன