மேலும் அறிய

தலித் மக்களின் பார்வையில் கிறித்தவம் - ஒரு அலசல்..

மேற்கத்தியினரை விட, சென்னை ராயப்பேட்டை சேரிப்பகுதியில் வாழ்ந்துவரும் காஞ்சனா (எ) லூர்துமேரி கிறித்தவத்தைப் பற்றிய வலுவான ஆழமான பார்வையைக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

உலகமெங்கும் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், இந்தியா, சீனா, இலங்கை, வங்கதேசம் போன்ற கிழக்கத்திய நாடுகளிலும் கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன.

பொதுவாக, இன்றளவும் மேற்குலக நாகரிகங்களின் கண்ணோட்டத்தில்தான் கிறித்தவம் பார்க்கப்படுகிறது. இந்தியா போன்ற கீழமை நாடுகளில் கிறித்தவம் ஒட்டு மொத்த தோல்வியை அடைந்திருப்பதாக சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உதாரணமாக, ஒடுக்கப்பட்ட மற்றும்  பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பேராசிரியர் திலிப் மண்டலின்  'DILIP MANDAL' (Christianity is a failed project in India - Dilip Mandal) சமீபத்திய கட்டுரை இந்த போக்கை எடுத்துரைப்பதாக உள்ளது. 

தலித் மக்களின் பார்வையில் கிறித்தவம் - ஒரு அலசல்..
புகைப்படம் - ரவி ரவீந்தரன்  

அக்கட்டுரையில், தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப்போன்ற தாராளவாத (Liberal) விடுதலை இறையியல் இந்தியாவில் பின்பற்றப்படவில்லை. மாறாக, இங்கு மிஷனரி முறை மேலோங்கி இருந்தது. இரண்டாவதாக, அமெரிக்க போன்ற நாடுகளில் தேவாலயங்களும் (கறுப்பின தேவலாயங்கள்), பாதிரியார்களும் சமூக சமத்துவத்தை முன்வைத்தன. ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாகவும், காலனியத்துக்கு எதிரான இயக்கங்களில் (அல்ஜீரியா போன்ற நாடுகளில்) ஒன்றாகவும் கிறித்தவம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது. ஆனால், இந்தியாவில் கிறித்தவம் இத்தகைய பண்பை முற்றிலுமாகக் கொண்டிருக்கவில்லை. மூன்றாவதாக, சாதி படிநிலைகளை கடப்பதற்கான வாய்ப்பில் கிறித்தவம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. உதாரணமாக, தலித் கத்தோலிக்கர்கள். 

எனவே, இந்தியாவில் கிறித்தவம் சாதித்தது என்ன? என்ற கேள்விக்கு மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விமர்சனங்களையும் ஒருவர் தோளில் சுமக்கத்தான் வேண்டும்.   

எதிர்வாதங்கள்: 

அதேசமயம், நெந்தனியல் ராபர்ட்ஸ், டேவிட் மோசே, காரின் கப்பாடிய (Karin Kapadia), அபர்ணா சுந்தர்  போன்ற எண்ணற்ற அறிஞர்கள் இந்தியாவில் கிறித்தவ சமயத்தின் தாக்கங்கள் குறித்து தங்கள் மதிப்பீடுகளை வேறுவிதமாக கொண்டுள்ளனர். 

தலித் மக்களின் பார்வையில் கிறித்தவம் - ஒரு அலசல்..

கிறித்தவர்களிடத்திலும் சாதி என்ற அடிப்படையில் பிரச்சனையை அணுகுவதற்குப் பதிலாக, சாதியைப் பற்றிய  மறுவாசிப்புக்கு கிறித்தவத்தின் தாக்கம் என்ற புதிய பார்வையோடு அணுக வேண்டும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. அதாவது, கிறித்தவம் சாதியை ஏன் உள்வாங்கியது என்பதற்குப் பதிலாக சாதி எவ்வாறு(ஏன்?) கிறித்தவத்தை உள்வாங்கியது என்ற கேள்வியை இவர்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.    

உதாரணமாக, தென்னிந்தியாவில் 90-களின் பிற்பகுதியில் கத்தோலிக்க திருச்சபைகளில் காணப்படும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தது. பேராயர், ஆயர்கள், பணியிடங்களில் தலித் கிறித்துவர்களை விகிதாச்சார அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும் போன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எண்ணற்ற தலித் விடுதலை விவிலிய விளக்க உரை புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில், கவனிக்கப்படவேண்டிய அம்சம்  என்னவென்றால், இவர்கள் திருச்சபை வளையத்துக்குள் மீட்சியைத் தேடுகின்றன. திருச்சபைக்குள் மறுக்கப்படும் உரிமைகளை முக்கிய கேள்வியாக எழுப்பப்படுகிறது.       


தலித் மக்களின் பார்வையில் கிறித்தவம் - ஒரு அலசல்..

 

அதேபோன்று, சென்னை நகரில் உள்ள பெரும்பாலான பெந்தகொஸ்தே திருச்சபைகளில் 90 சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளனர். இங்கே, பாலின சமத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டு ஆண்டுகாலமாக, மதச் சடங்குகளில் புறக்கணிக்கப்பட்ட  தலித் பெண்கள் இங்கு பைபிளை தழுவுகின்றனர். வசனங்களை மனப்பாடம் செய்கின்றனர். பிறருக்காக பிரார்த்திக்கின்றனர். அழுகை மூலமாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். ஆண்டவரே.... உணவையும், உடையையும் கொடு, என்ற அவர்களின் அழுத்தமான குரல்கள் மீட்சி அரசியலின் அடிப்படை.சுருங்கச்சொன்னால், சென்னையில் உள்ள ஒவ்வொரு பெந்தகொஸ்தே திருச்சபையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் மகளிர் சுயஉதவி குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.         

எனவே, இந்தியாவில் கிறித்தவம் மறுவாசிப்புக்கு உட்பட்டுள்ளது. தீண்டாமை என்ற முதற்பாவத்தை கிறித்துவம் கடக்க வேண்டும். தலித் கிறித்துவ  மக்களின் உருவாக்கி வைத்துள்ள பண்பாட்டு அரசியல் மூலம்தான் கிறித்தவம் முழுமையடைகிறது. மேற்கத்திய மக்களவை விட, சென்னை ராயப்பேட்டை சேரிப்பகுதியில் வாழ்ந்துவரும் காஞ்சனா (எ) லூர்துமேரி கிறித்தவத்தைப் பற்றிய வலுவான ஆழமான பார்வையைக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

கருத்தியல் பொது செல்வாக்கை (Counter hegemony) ஈட்ட வேண்டும்:

மக்கள், அரசு, சமயம், விடுதலை, வர்க்கம் போன்ற எந்தவொரு பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள் குறித்த கேள்விகளுக்கும் கிராம்சியின் குடிமைச் சமூகம் எனும் கருத்தாக்கத்தில் இருந்து பதில் தேடுவது இன்றியமையாதாகிறது. முதலாளி/தொழிலாளி என்ற முரண்பாட்டைத் தாண்டி, அரசியல் கட்டுமானம் (பொலிடிக்கல் சொசைட்டி - Political Society) / குடிமைச் சமூக மேற்கட்டுமானம் (சிவில் சொசைட்டி - Civil Society) ஆகிய இரண்டு கட்டுமானங்கள் மூலம் ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது.

அரசியல் கட்டுமானம் என்பது நேரடியாக வன்முறை வழியில் ஒடுக்குகிறது என்றால், குடிமைச் சமூக கட்டுமானம் என்பது சமயம், குடும்பம், கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் வழி ஆளுமை வர்க்கத்திற்கு  அதாரவான பொதுவான மனோபாவம் (hegemony) ஒன்றை உருவாக்கி தருகிறது. 

 

தலித் மக்களின் பார்வையில் கிறித்தவம் - ஒரு அலசல்..
அண்டோனியோ கிராம்சி 

எனவே, சாதிக்க விரும்பும் அடித்தட்டு மக்களும் இதேபோன்ற இரட்டைத் திட்டத்தை கொண்டிருக்கவேண்டும் என்று கிராம்சி குறிப்பிடுகிறார். அதாவது, அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதைத்தாண்டி குடிமைச் சமூக மேலாண்மையை நோக்கி நகரவேண்டும். அதாவது, தொழிலாளர் வர்க்கம் புதிய அறிவுத்துறையினரோடு உண்மையாகவே ஒரு கூட்டணியை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம், கருத்தியல் பொது செல்வாக்கை (Counter hegemony) ஈட்ட வேண்டும்.   

பேராசரியர் முனைவர் ந.முத்துமோகன், மார்க்சியக் கட்டுரைகள் என்ற தனது புத்தகத்தில் இந்தியச் சூழலில் கிராம்சியின் கருத்தாக்கங்களை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். "பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள் குடிமைச் சமூகச் செல்வாக்கு எனும் திசையில் தான் சித்தித்தார்கள் என எண்ணத் தோன்றுகிறது. சாதியம் குறித்த பிரச்சனையை இந்து மதம்/ பௌத்தம் என்ற ஒரு பேரும் விவாதத்தின் வழி அம்பேத்கர் சமூகமயமாக்கியது கணிசமான ஒரு கலாச்சாரச் செயல்பாடாகத் தெரிகிறது. பெரியாரின் மொழியும் கலகச் சொல்லாடல்களும் நமது கவனத்தைக் கவருகின்றன" என்றார்.   

இந்தியாவில் சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மை மக்களின் பல்வேறு குறைகளைக் களைய, இந்திய அரசு, உச்ச நீதிமன்ற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில்  குழு அமைத்தது. இக்குழு,சாதி என்பது இந்துக்களின் பிரச்சனை என்ற வரலாற்று ரீதியான வாதத்தை ஒதுக்கி, இந்திய சமூகத்தின் அடிப்படை கருப்பொருளாக கொள்ளவேண்டும் என்று தெரிவித்தது.  எனவே, சாதி  தீண்டாமைகளை களைய பல்வேறு தளங்களில் போராட வேண்டியிருக்கிறது. அந்த வகையில், பௌத்தம், கிறித்துவம் மூலம் கருத்தியல் பொது செல்வாக்கு (Counter hegemony) ஈட்டப்பட்டு வருகிறது.    

இதைக்குறித்த வாசிப்புக்கு இந்தப் புத்தகங்கள் ஏற்றவை

1. Don’t listen to VHP and panic. Christianity is a failed project in India - Dilip Mandal - 

2. ‘Mirrored in God’: Gramsci, Religion and Dalit
Women Subalterns in South India  - Karin Kapadia 

3. Caste and Christianity DAVID MOSSE (India Seminar)

4. ந.முத்துமோகன் - மார்க்சியக் கட்டுரைகள் (காவ்யா பதிப்பகம் ) 

5. Transformation and the Suffering Subject: Caste/class and Gender in Slum Pentecostal Discourse - Nathaniel Roberts

6. Thinking beyond Secularism: The Catholic Church and Political Practice in Rural South India - Aparna Sundar. 

7. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget