ஸ்கூட்டரில் குளித்துக்கொண்டே சென்ற ஜோடி… வைரலான வீடியோ! நக்கலாக பேசி பதில் விடியோ… நடவடிக்கை எடுக்கப்படுமா?
மும்பை அருகே தானேயில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலானது. மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதை காவல்துறையை டேக் செய்தும் பகிர்ந்துள்ளனர்.
ஸ்கூட்டரில் செல்லும் ஜோடி ஒன்று பக்கெட்டில் தண்ணீர் வைத்துகொண்டு குளித்து கொண்டே செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதி அளித்துள்ளது.
ஸ்கூட்டரில் செல்லும்போது குளியல்
சமூக ஊடகங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்ற வெறி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது மக்களை வினோதமாக சிந்திக்க வைத்தது, வித்தியாசமான செயல்களை செய்ய வழிவகுக்கிறது. பொதுவாக சம்பந்தமில்லாத உணவு காம்பினேஷன்களை சேர்த்து உண்டு அதன் மூலம் சமூக வலைத்தளத்தில் அதிக பார்வைகளை பெறுவது வழக்கம். அவர்கள் தொடங்கி உயிருக்கே ஆப்தாகிவிடும் சில ஸ்டண்ட் முயற்சிகள் வரை இந்த நிகழ்வுகள் நீள்கின்றன. தற்போது, அதே போன்ற முயற்சியில், மகாராஷ்டிராவில் ஒரு ஆணும் பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டரில் செல்லும்போது குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை அருகே தானேயில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலானது. மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதை காவல்துறையை டேக் செய்தும் பகிர்ந்துள்ளனர்.
@DGPMaharashtra @ThaneCityPolice
— WeDeserveBetterGovt.🇮🇳 (@ItsAamAadmi) May 15, 2023
This is ulhasnagar, Is such nonsense allowed in name of entertainment? This happened on busy Ulhasnagar Sec-17 main signal.Request to take strict action lncluding deletion of social media contents to avoid others doing more nonsense in public. pic.twitter.com/BcleC95cxa
புகார் செய்து டுவீட்
புகார் செய்யப்பட்ட அந்த டிவீட்டில் மகாராஷ்டிரா டிஜிபி மற்றும் தானே நகர காவல்துறை ஆகிய ஐடிக்களை டேக் செய்து, "இது உல்ஹாஸ்நகர், பொழுதுபோக்கின் பெயரில் இது போன்ற முட்டாள்தனங்கள் அனுமதிக்கப்படுமா? இது பரபரப்பான உல்ஹாஸ்நகர் Sec-17 மெயின் சிக்னலில் நடந்தது. மற்றவர்களும் இதுபோன்று பொது இடங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்க, இது போன்ற சமூக ஊடக வீடியோக்களை நீக்குவது உட்பட இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று எழுதியிருந்தது. இந்த வீடியோ WeDeserveBetterGovt என்ற பக்கத்தால் பகிரப்பட்டது. வைரலாகும் இந்த வீடியோ, மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உலாஸ்நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் எடுக்கப்பட்டது என்று டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானே நகர காவல்துறை பதில்
இதற்கு பதிலளித்த தானே நகர காவல்துறை, "தேவையான நடவடிக்கைக்காக இந்த தகவல் தானேயில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ட்வீட் செய்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு ஆணும் பெண்ணும் ஸ்கூட்டரில் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அந்தப் பெண் ஒரு பச்சை வாளியைச் மடியில் வைத்துகொண்டு, சிவப்பு மக் எடுத்து தண்ணீரை தலை மேல் ஊற்றத் தொடங்குகிறார். பின்னர் அந்த ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றவர் தலையிலும் தண்ணீரை ஊற்றுகிறார். அருகில் வாகனங்களில் நிற்பவர்கள் சிலர் சிரிப்பதையும் காணலாம். மேலும் சிக்னல் போடப்பட்டு, வண்டி ஒட்டும்போதும், அந்த வாகனங்கள் நிறைந்த சாலையில் இருவரும் குளிதுக்கொண்டே செல்கிறார்கள்.
आपली माहिती वाहतूक नियंत्रण कक्ष, ठाणे यांना आवश्यक कार्यवाहीसाठी कळविली आहे.
— Thane City Police -ठाणे शहर पोलीस (@ThaneCityPolice) May 15, 2023
நக்கலான பதில் கூறிய யூட்யூபர்
அந்த வீடியோவில் இருப்பவர் மும்பையைச் சேர்ந்த யூடியூபரான ஆதர்ஷ் சுக்லா என்பது தெரியவ்துள்ளது. இரு சக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற போக்குவரத்து விதிகளை பின்பற்றாததற்காக மும்பை காவல்துறையிடம் அவர் இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டார். ஆனால் அதிலும் நக்கலாக "ஸ்கூட்டர் ஓட்டும்போது குளித்ததாக" குறிப்பிடுவதற்கு பதிலாக, "குளிக்கும்போது ஸ்கூட்டர் ஒட்டியதாக", குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ஸ்டோரியில், "நான் குளிக்கும் போது ஆக்டிவா ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், நான் அவ்வாறு செய்யும் போது ஹெல்மெட் அணியாமல் இருந்தது எனது மிகப்பெரிய தவறு. வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்" என்று அவர் தன் ஃபாலோயர்ஸை வலியுறுத்தினார். விதிகளை பின்பற்றாததற்காக அபராதம் செலுத்துவதாக திரு சுக்லா கூறினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "தயவுசெய்து என்னை கைது செய்வதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம். நான் தவறு செய்துவிட்டேன், அதற்கான அபராதத்தை செலுத்துவேன்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் குளித்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.