சொந்த திருமணத்திற்கு வர மறந்த எம்.எல்.ஏ! போலீசில் புகாரளித்த காதலி! விசாரணையில் திடுக் தகவல்!
பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்கள், பதவியில் இருப்பவர்கள் மீது பாலியல் செய்தது, மோசடியில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவது வழக்கம்.
தனது சொந்த திருமணத்திற்கு வராமல் ஏமாற்றியதாக, பிஜேடி கட்சி எம்.எல்.ஏ.,பிஜய ஷங்கர் தாஸ் மீது அவரது மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.
பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்கள், பதவியில் இருப்பவர்கள் மீது பாலியல்,பண மோசடியில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தனது சொந்த திருமணத்திற்கு வராமல் ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள டிர்டோல் தொகுதி எம்.எல்.ஏ. பிஜய ஷங்கர் தாஸூக்கும் அவரது காதலியான சோமாலிகாவுக்கும் இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஜகத்சிங்பூரில் உள்ள திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பதிவாளர் அலுவலகத்தில் மே 17 ஆம் தேதி இருவரும் திருமணத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.
அம்மாநில விதிகளின் படி விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் பதிவு திருமணம் முடிக்கப்பட வேண்டும். ஆனால் பதிவு செய்த 30 நாட்களிலேயே இந்த திருமணம் நடக்கவிருந்தது. குறிப்பிட்ட நாளில் காதலி சோமாலிகா பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு 3 மணி நேரம் காத்திருந்தும் மாப்பிள்ளையான எம்.எல்.ஏ. பிஜய ஷங்கர் தாஸ் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சோமாலிகா வருங்கால கணவர் மீது ஜகத்சிங்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில் பிஜய சங்கர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும், ஆனால் குறிப்பிட்ட தேதியில் அவர் ஜகத்சிங்பூரில் உள்ள திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நானும், பிஜயசங்கர் தாஸூம் மூன்று வருடங்களாக நான் காதலித்து வருகிறோம். திருமணத்திற்கு வராத நிலையில் இது தொடர்பாக பிஜய சங்கரைத் தொடர்பு கொண்டபோது எனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அதேசமயம் எம்.எல்.ஏ.வின் உறவினர்களால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக சோமாலிகா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்த புகாரில் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டுவதற்காக பிஜயசங்கர் பாலியல் மோசடியை நடத்தி வருவதாகவும், தன்னுடைய மதிப்பெண் சான்றிதழை திருடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகார்களுக்கு பதிலளித்துள்ள பிஜய ஷங்கர் தாஸ், திட்டமிட்ட தேதியில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கவில்லை என கூறியுள்ளார். திருமணப் பதிவு கால அவகாசம் முடிய இன்னும் 60 நாட்கள் உள்ள நிலையில், அந்த தேதியில் திருமணம் செய்ய வருமாறு அழைப்பு வராததால் அங்குச் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பிஜயசங்கர் தாஸூம், சோமாலிகாவும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது சில காரணங்களால் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்