Monkey Pox and Corona : குரங்கு அம்மை நோயும், கோவிட் தொற்றும் ஒரே நேரத்தில் தாக்குமா?
உலகம் முழுவதும் இப்போது குரங்கு அம்மை பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 20 நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இப்போது குரங்கு அம்மை பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 20 நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளது. ஏற்கெனவே கரோனாவிலிருந்து உலகம் முழுமையாக மீளாத சூழலில் குரங்கு அம்மை மக்கள் மத்தியில் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள் கரோனா அளவுக்கு வேகமாக குரங்கு அம்மை பரவாது என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.
இது குறித்து மும்பை மசினா மருத்துவமனை நெஞ்சக மருத்துவர் சுலைமான், கோவிட் தொற்றும் குரங்கு அம்மை தொற்றும் ஏற்படுத்தும் வைரஸ்கள் வெவ்வேறு. குரங்கு அம்மையால் உயிரிழப்பு அபாயம் என்பது 10% தான். ஆனால் ஒருவருக்கு கரோனா ஏற்பட்டிருக்கும் போதே குரங்கு அம்மையும் வந்தால் அவருக்கு இரண்டும் ஏற்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்வதே கடினமாகிவிடும். ஏனெனில் இரண்டின் அறிகுறிகளும் ஒன்று என்றார்.
கோவிட் 19 என்பது SARS-CoV-2 வைரஸால் பரவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இது தொற்றால் பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல், பேச்சு, பாட்டு, சுவாசம் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆனால் குரங்கு அம்மை விலங்கிடம் இருந்து பரவும் நோய். பின்னர் இது மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவ ஆரம்பித்தது. இது தொற்று ஏற்பட்டவர்களின் சுவாச திவளைகள் அல்லது அவர்கள் பயன்படுத்திய படுக்கை ஆகியனவற்றில் இருந்து பரவலாம். குரங்கு அம்மை ஏற்பட்டால் உடலில் அரிப்புகள் வரும். இந்த நோய் உடலில் உருவாக 6 முதல் 13 நாட்கள் எடுத்துக் கொள்ளும். பின்னர் 5 முதல் 21 நாட்கள் வரை இதன் தாக்கம் இருக்கும். ஐ.நா. பொதுச்சபை கூற்றின்படி குரங்கு அம்மை வேகமாகப் பரவக்கூடிய நோய் அல்ல. குழந்தைகள் மத்தியில் மட்டுமே இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிகிச்சை என்ன?
கோவிட் 19 தொற்று ஆர்டி பிசிஆர் பரிசோதனை மூலம் அறியலாம். ஆனால் குரங்கு அம்மை நோயை மைக்ரோஸ்கோபி ஆய்வு மூலம் அறிய வேண்டும். இரண்டுமே ஒரு சேர தாக்கியிருந்தால் சிகிச்சையானது நபருக்கு நபர் வேறுபடும். இணை நோய்கள், வயதானோர் என்றால் இரண்டு தாக்கியிருக்கும் பட்சத்தில் கவனமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
தடுப்பது எப்படி?
அமெரிக்காவின் தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் படி, குரங்கு அம்மையில் இருந்து தற்காத்துக் கொள்ள வைரஸை உருவாக்கும் விலங்குகளிடம் இருந்து விலகி இருத்தலே. அதே போல் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் படுக்கை, உடை, துண்டு ஆகியனவற்றை பயன்படுத்தக் கூடாது. நோய் தாக்கப்பட்டவரை தனிமைப்படுத்துதல் அவசியம். அதேபோல் அவர்களை பராமரிக்கும் போது மாஸ்க், க்ளவுஸ் ஆகியன பயன்படுத்தலாம். பிபிஇ கவச உடையைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.
குரங்கு அம்மைக்கு தடுப்பூசி உள்ளது. இது ஆஃப்ரிக்காவில் தோன்றிய நோய் என்பதால், அங்கு மத்திய மற்றும் மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இருப்பினும் நிறைய பேர் அதை தவிர்ப்பதாலேயே அவ்வப்போது இந்த அவுட்பிரேக் நடைபெறுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரிய அம்மை நோய்க்கு எப்படி உலகளவில் தடுப்பூசி போட்டு அது அழிக்கப்பட்டுள்ளதோ அதுபோல் குரங்கு அம்மை தடுப்பூசியையும் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )