Breaking News LIVE: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வளர்ச்சிக்கான அடித்தளம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Background
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து 108.96 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 99.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வளர்ச்சிக்கான அடித்தளம் - முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக அரசு பொறுப்பேற்றபின் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வளர்ச்சிக்கான அடித்தளம். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம். திமுக அரசின் செயல்பாடுகள் மாநில வளர்ச்சி, இளைஞர்கள் எதிர்காலத்திற்கு துணைநிற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்
அவசரகால சட்டம் மனித உரிமை மீறல் - மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் என மனித உரிமைகள் ஆணையக்குழு கூறியுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உறுதிப்படுத்தப்படாமல் அவசர நிலை அமலாகியுள்ளது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.





















