Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
Bihar Exit Poll Result 2025: பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில், கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், முதல் கட்டத்தைவிட இரண்டாம் கட்டத்தில் இன்னும் அதிக சதவீத வாக்குகள், அதாவது மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன் படி அதை தற்போது பார்க்கலாம்.
Times Now நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
பிரபல ஊடகமான டைம்ஸ் நவ்(Times Now) நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
அவர்களது கருத்துக் கணப்பன்படி,
- பாஜக கூட்டணி - 135 முதல் 150 இடங்களை பிடிக்கும்.
- ஆர்ஜேடி கூட்டணி - 88 முதல் 103 இடங்களை பிடிக்கும்.
- ஜன் சுராஜ் - 0 முதல் 1 இடத்தை பிடிக்கும்.
- மற்றவை - 0 முதல் 6 இடங்களை பிடிக்கும்.

NDTV-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
மற்றொரு பிரபல ஊடகமான என்டிடிவி(NDTV) நடத்திய கருத்துக் கணிப்பிலும் பாஜக கூட்டணியே முந்துகிறது. அவர்களது கருத்துக் கணிப்பின்படி,
- பாஜக கூட்டணி - 146 இடங்களை பிடிக்கும்.
- ஆர்ஜேடி கூட்டணி - 90 இடங்களை பிடிக்கும்.
- ஜன் சுராஜ் - 2 இடங்களை பிடிக்கும்.
- மற்றவை - 5 இடங்களை பிடிக்கும்.

People's Pulse-ன் கருத்துக் கணிப்பு
பீப்பிள்ஸ் பல்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் விவரங்களை கீழே காணலாம். அவர்களது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி,
- பாஜக கூட்டணி - 133 முதல் 148 இடங்களை பிடிக்கும்.
- ஆர்ஜேடி கூட்டணி - 87 முதல் 102 இடங்களை பிடிக்கும்.
- ஜன் சுராஜ் - 0 முதல் 2 இடத்தை பிடிக்கும்.
- மற்றவை - 3 முதல் 6 இடங்களை பிடிக்கும்.

JVC POLL-ன் கருத்துக் கணிப்பு
ஜேவிசி போல் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே முந்துகிறது. அவர்களது கருத்துக் கணிப்பன்படி,
- பாஜக கூட்டணி - 135 முதல் 150 இடங்களை பிடிக்கும்.
- ஆர்ஜேடி கூட்டணி - 88 முதல் 103 இடங்களை பிடிக்கும்.
- ஜன் சுராஜ் - 0 முதல் 1 இடத்தை பிடிக்கும்.
- மற்றவை - 3 முதல் 6 இடங்களை பிடிக்கும்.

Matrize-ன் கருத்துக் கணிப்பு
- பாஜக கூட்டணி - 147 முதல் 167 இடங்களை பிடிக்கும்.
- ஆர்ஜேடி கூட்டணி - 70 முதல் 90 இடங்களை பிடிக்கும்.
- ஜன் சுராஜ் - 0 இடத்தை பிடிக்கும்.
- மற்றவை - 0 இடத்தை பிடிக்கும்.

Peoples Insight-ன் கருத்துக் கணிப்பு
- பாஜக கூட்டணி - 133 முதல் 148 இடங்களை பிடிக்கும்.
- ஆர்ஜேடி கூட்டணி - 87 முதல் 102 இடங்களை பிடிக்கும்.
- ஜன் சுராஜ் - 0 முதல் 2 இடங்களை பிடிக்கும்.
- மற்றவை - 3 முதல் 6 இடங்களை பிடிக்கும்.






















