See Pics | ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து சிக்கனை ருசித்த கரடி.. அலறிய பணியாளர்கள்.. வைரலாகும் வீடியோ
கவர்னர் மாளிகையின் ஊழியர்கள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த கிச்சனில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டுள்ளது.
![See Pics | ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து சிக்கனை ருசித்த கரடி.. அலறிய பணியாளர்கள்.. வைரலாகும் வீடியோ Bear Enters Sikkim Raj Bhavan, Eats Chickens; Rescued See Pics | ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து சிக்கனை ருசித்த கரடி.. அலறிய பணியாளர்கள்.. வைரலாகும் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/c9069e9d4ed4240f37d2aba6205d1d0b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிக்கிம் மாநில கவர்னர் மாளிகையில் இமாலயக் கருப்புக் கரடி ஒன்று புகுந்து கோழிக்கறி சாப்பிடதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநில கவர்னராக இருப்பவர் கங்கா பிரசாத் சௌராஸியா. நேற்று அங்கே கவர்னர் மாளிகையில் இரவு இமாலயப் கருப்புக் கரடி ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கவர்னர் மாளிகையின் ஊழியர்கள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த கிச்சனில் வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டுள்ளது. கரடி புகுந்த தகவல் அறிந்ததும் உடனடியாக வனச்சரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருட்டில் கரடியை பிடிப்பது கடினம் என்பதால் விடிந்த பிறகு கரடியைப் பிடிப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. அதனால் வனத்துறை காவலர்கள் விடியும் வரை ஆளுநர் மாளிகையைச் சுற்றி கரடி உள்ளே புகாமல் காவல் காத்தனர்.
View this post on Instagram
விடிந்த பிறகு கரடி பிடிக்கக் களத்தில் இறங்கிய வனக்காவலர்கள் மதியம் வரை போராடி பதுங்கியிருந்த கரடியை பிடித்தனர். பயந்து போய் நீர் குழாயில் பதுங்கியிருந்த கரடியை துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.
கரடியைப் பிடித்தது குறித்து பகிர்ந்த வனச்சரகத்தினர், ‘இரவு முழுவதும் கவர்னர் மாளிகைக்குள் கரடி புகுந்துவிடாதவாறு காவல் காத்தோம். காலை முழுவதும் கரடியை வலைவீசித் தேடினோம். மதியம் வரை தேடியபிறகுதான் கரடி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. நீர் வெளியேறும் குழாயில் கரடி பதுங்கியிருந்தது. அதை அடுத்து கரடிக்கு துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தினோம். முதல் ஊசி குறிதப்பியதை அடுத்து இரண்டாவது ஊசி செலுத்தி கரடியைப் பிடித்தோம். பிடிக்கப்பட்ட கரடியைத் தற்போது பங்கலகா வனவிலங்கு சரணாலயத்தில் விடவிருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாலயக் கருப்புக் கரடிகள் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)