மேலும் அறிய
Advertisement
மேற்கு வங்கம், அசாமில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கடந்த 27ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிடுகிறார்.
அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion