மேலும் அறிய
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்..
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலையளிக்கும் விதமாக உடல்நிலை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் அவரின் இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிபு உள்ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















