சென்னை மழை: மக்களுக்கு ஹெல்ப் செய்யாத ஹெல்ப் லைன் எண்கள்!
மழைக்காக அறிவிக்கப்பட்ட ஹெல்ப் லைன் எண்கள் எடுக்காததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியிருப்பதன் எதிரொலியாக சென்னையில் நேற்றிலிருந்து கனமழை கொட்டிவருகிறது. தற்போது விட்டு விட்டு மழை பெய்தாலும் 10 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் தலைநகரம் தத்தளிக்கும் நகரமாக மாறியிருக்கிறது.
மக்கள் அனைவரும் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், சென்னையில் கனமழை தொடரும் எனவும், 10 ,11ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், 2015ஆம் ஆண்டு திரும்பிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர்.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2000 கன அடியும், புழல் ஏரியிலிருந்து 2000 கன அடியும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்க சென்னை மாநகராட்சி சார்பாக, 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய ஹெல்ப் லைன் எண்கள் கொடுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, 9445477205 எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Dear Chennaiites
— Greater Chennai Corporation (@chennaicorp) November 2, 2021
For flood related grievances please call:
04425619206
04425619207
04425619208#ChennaiCorporation#HeretoServe pic.twitter.com/XtKMn7w7OM
இன்று மழை காரணமாக அவதியுற்ற மக்கள் மேலே குறிப்பிட்ட எண்களை தொடர்புகொண்டபோது மேலும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நான்கு எண்களில் எந்த நம்பருக்கும் ரிங் போகவில்லை. வாட்ஸ் அப் நம்பருக்கு மெசேஜ் அனுப்பினாலும் அதை யாரும் பார்க்கவில்லை.
அதேபோல், TN SDMA (தமிழ்நாடு மாநில பேரிடர் மேனேஜ்மெண்ட் அத்தாரிட்டி) சார்பில் கொடுக்கப்பட்ட ஸ்டேட் ஹெல்ப் லைன் எண் 1070 என்கிற நம்பரும், வாட்ஸ் அப் நம்பரான 94458 69848ம் மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மழையில் மாட்டிக்கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கியிருக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வு செய்துவரும் சூழலில் இதுபோன்ற இன்னல்கள் ஏற்படுவதை அரசு அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்பதே மக்கள் குரலாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்