(Source: ECI/ABP News/ABP Majha)
ராஜ்ய சபா தேர்தல்.. மாநில கட்சிகளுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக..
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பதவிக் காலத்தை ஜூலை மாதத்துடன் நிறைவு செய்ய உள்ள நிலையில், 2022-ஆம் ஆண்டு மத்தியில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவரை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்தெடுக்க மாநில சட்டமன்றத்தின் எம்.எல்.ஏக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளால் குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் ராஜ்யசபா தேர்தலில் மாற்றம் எற்பட வாய்ப்பிருப்பதாக மூத்த பாஜக தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான இடத்தை ஆக்கிரமிக்க அதிக அளவில் அணிதிரள்கிறது. பாஜகவுக்கு எதிரான இதர கட்சிகளின் எதிர்ப்பிலும் அதிக சுறுசுறுப்பு உள்ளது. அது எப்படி இருக்கும் என்று எங்களால் கணிக்க முடியாது, ஆனால் பாஜக கட்சி அதை பற்றி அறிந்திருக்கிறது” என்று கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு காலியாக இருக்கும் 75 ராஜ்யசபா இடங்களில், 11 உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை, எனவே புதிதாக அமைக்கப்படும் சட்டசபையில் SP மற்றும் BSP கட்சிகளின் பலம் முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள 75 ராஜ்யசபா தொகுதிகளில், 26 இடங்கள் தற்போது பாஜக உறுப்பினர்களிடம் உள்ளன. ராஜ்யசபாவில் தங்களது பலத்தை பெரிய அளவில் அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதனை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யும் என்று பாஜக தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
237 உறுப்பினர்களைக் கொண்ட மேல்சபையில் தற்போது பாஜகவுக்கு 97 எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் தனிப்பெரும்பான்மை உள்ளது.
இப்போது நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் சிறிய கட்சிகளின் எதிர்ப்பால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் பிஜு ஜனதா தளம் (BJD) போன்ற கட்சிகள் ஆளும் பாஜகவிடம் இருந்து வெளிப்படையாக விலகியிருக்கின்றன.
“ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் கே.சந்திரசேகர் ராவ், புவனேஸ்வரில் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு எங்களது கட்சியுடன் பிரச்சனை உள்ளது. ஆனால் ஒய்எஸ்ஆர்சியிடம் பெரிய பிரச்சனை இல்லை” என் தென் இந்திய அரசியல் கட்சிககளின் செயல்பாட்டை அறிந்த பாஜக அலுவலக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
“உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தவறினால், இதர கட்சிகளின் நிலைபாடுகள் கடுமையானதாக இருக்கும் என்பதை பாஜக மூத்த தலைவர்கள் கணித்துள்ளனர். “அப்படியானால், பட்நாயக் மற்றும் சந்திர சேகர ராவ் போன்ற தலைவர்கள் தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு அணியை திரட்டுவார்கள். அடுத்த இரண்டு வருடங்களில் அந்த அணிக்கு மக்களிடத்தில் வரவேற்பு கிடைக்கும். பின்னர் ராஜ்யசபாவில் பிரதிபலித்து சட்டமன்ற செயல்முறையில் பாஜகவுக்கு கடினமாக செயல்படுவார்கள், ”என்று பாஜக நிர்வாகி விளக்கினார்.