மேலும் அறிய

சீமான் -அண்ணாமலை சந்திப்பு! எதிர்க்கட்சிகள் ஒன்றும் எதிரி கட்சிகள் இல்லை - வானதி சீனிவாசன் விளக்கம்

”சீமானும் அண்ணாமலையும் கட்டியணைத்துக் கொண்டது சந்தோஷமாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரி கட்சிகள் கிடையாது” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். சுற்றுச்சூழலை பாதுகாக்க செல்போன் பயன்பாட்டின் மூலம் வெளியேறும் மாசுபாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனது செல்போன்களை அணைத்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகம் ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் பெற்றதை ஒட்டி கார்பன் அளவை குறைக்கும் நிகழ்வை முன்னெடுத்து உள்ளோம். கார்பன் அளவை எந்த வகையில் குறைக்க முடியும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கார்பன் சமநிலை:

2500 மாணவிகள் 5 நிமிடங்கள் தங்கள் செல்போனை அனைத்து வைத்து 5 கிராம் கார்பணுடன் சமன் செய்யும் நிகழ்வை தொடங்கி உள்ளோம். இதனை தொடர்ச்சியாக அவர்கள் ஒரு வருடம் செய்யும்போது 182 மரங்கள் நடுவதற்கு சமமாகும். இதுபோன்ற முயற்சிகளை ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கும்போது உலக வெப்பமயமாதல் சிக்கலுக்கான் தீர்வுக்கு எளிய நடை போடுகிறோம்.

2070க்குள் இந்தியா கார்பன் சமநிலை அடைய வேண்டும் என்கின்ற இலக்கை பிரதமர் மோடி வைத்துள்ளார். 1 கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முழுமையான பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க இயலாமல் உள்ளது.

டீ வாங்க 27 லட்சமா?

மக்கள் பங்களிப்பு இருந்தால் பிளாஸ்டிக் ஒழிப்பை சாத்தியம் ஆக்க முடியும். வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்தை கட்டுப்படுத்த ஒரு வாரத்தில் 27 லட்சம் டீ வாங்க செலவழித்ததாக கூறியுள்ளனர். அது எத்தனை பேர், எத்தனை நாட்கள், அப்படி உயரக அளவில் கொடுத்தார்கள்?, என்றால் எங்கிருந்து கொடுத்தார்கள்? அந்த காஸ்லியான தேநீர் உள்ளிட்ட பொருள்கள் கொடுப்பதற்கு மாநகராட்சிக்கு மனம் உள்ளதா? தொடர்பாக விரிவான தெளிவான விளக்கம் என்பதை கொடுக்க வேண்டும். மாநகராட்சி தற்போது கொடுத்துள்ள பதில் பொத்தாம் பொதுவாக உள்ளது திருப்திகரமாக இல்லை. மாநகராட்சியின் ஒரு சில நடவடிக்கைகள் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

சீமான் -அண்ணாமலை சந்திப்பு! எதிர்க்கட்சிகள் ஒன்றும் எதிரி கட்சிகள் இல்லை - வானதி சீனிவாசன் விளக்கம்

அண்ணாமலை - சீமான் சந்திப்பு

திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். முதலமைச்சர்கள் தான் மாறி இருக்கிறார்கள் திமுக ஆட்சியில் செயல்பாடுகள் மாறவில்லை என்பது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தெரியப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவாகிக் கொண்டிருக்கிறது.

இப்பிரச்சனைகளில் அதிகாரிகளை மாற்றம் செய்து கண்துடைப்பு செய்வது அரசின் வேலை அல்ல. மக்களுக்கு ஆக்கபூர்வமான செயல்கள் பிரயோஜனப் படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். கண்துடைப்பு செய்வதற்காக அதிகாரிகள் மாற்றம் செய்யப்படக் கூடாது.

விலைவாசி உயர்வு:

மாநில பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களின் பெயர்களும் கூறப்படுவதில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட்டில் கூட அனைத்து மாநிலங்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அறிவிக்கும் திட்டங்களில் நம் மாநிலத்திற்கு எவ்வளவு வந்துள்ளது என்பது தான் முக்கியம். திமுக கூட்டணி கட்சிகளுக்கு முழுக்க முழுக்க அரசியலுக்காக, பாஜக கூட்டணி குறித்து ஏதாவது கூற வேண்டும், மோடியைப் பற்றி திட்டினால் தான் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கையை முடிவு செய்து வைத்துள்ளார்கள். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என எல்லா இடத்திலும் கை வைத்து விலைவாசியை ஏற்றி உள்ளனர். தேர்தல் சமயத்தில் எல்லா மாவட்டங்களுக்கும் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது காணொலி வாயிலாக மட்டுமே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அரசியல் கடந்த சந்திப்பு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அண்ணாமலையும் கட்டியணைத்துக் கொண்டது சந்தோஷமாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரி கட்சிகள் கிடையாது. நல்லது கெட்டவைக்கு கூட செல்லாமல் இருந்த சூழலில், இரண்டு பேரும் இணைந்து இருந்ததை பார்க்கும் போது எவ்வளவு அற்புதமாக இருந்தது. அரசியலைக் கடந்த நாகரிகம் என்று பார்க்கும்போது அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கிறேன். எங்கள் மாநில தலைவரை இப்படி என் லென்ஸ் வைத்து பார்க்கிறீர்கள். பாஜகவை பொறுத்தவரை எங்களோடு சேர்ந்து அரவணைத்து தமிழ்நாட்டில் புதிய அரசியல் செய்வதற்கு எங்களுடன் யார் வந்தாலும் சந்தோஷப்படுவோம். கட்டியணைப்பதன் மூலம் புதிய உறவு வருகிறதா என்பதை அவர்கள் தான் கூற வேண்டும். விஜய் மாநாடு நடத்துவது தொடர்பாக பேசியபோது அரசியல் கட்சிகள் என்றால் மாநாடு நடத்துவது என்பது இயல்பு தானே. அவர் ஆரம்பித்து வரட்டும் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget