மேலும் அறிய

கோடநாடு வழக்கில் அதிமுக நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை..!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சஜீவனுக்கு தொடர்பு இருப்பதாக துவக்கத்தில் இருந்தே, குற்றச்சாட்டி இருந்து வந்த நிலையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.

கோடநாடு வழக்கில் அதிமுக நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை..!

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு இருந்து வந்த நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த வாரம் சசிகலாவிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அதிமுக நிர்வாகிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த சஜீவனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மர வியாபாரியான சஜீவன் மாநில வர்த்தக அணி நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்தவர். கோடநாடு பங்களாவில் உட்புற மர அலங்கார வடிவமைப்பு பணிகளை மேற்கொண்ட சஜீவன், அப்பங்களாவை நன்கு அறிந்தவர் எனக் கூறப்படுகிறது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சஜீவனுக்கு தொடர்பு இருப்பதாக துவக்கத்தில் இருந்தே, குற்றச்சாட்டி இருந்து வந்த நிலையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
Gold Silver Rate Historic Peak: அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
வீடியோ காலில் வந்த எமன்... காதலன் தற்கொலை நாடகம்..பயத்தில் காதலி தற்கொலை - கடைசியில் நடந்த சோகம்
வீடியோ காலில் வந்த எமன்... காதலன் தற்கொலை நாடகம்..பயத்தில் காதலி தற்கொலை - கடைசியில் நடந்த சோகம்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
Embed widget