மேலும் அறிய

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ; சீறிப்பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள்..

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர்.

கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.

கடந்த 2017 ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டதில் இருந்து, கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  கடந்த 9 ம் தேதியன்று கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ; சீறிப்பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள்..

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் ஐந்தாவது ஆண்டாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை  மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துகின்றன. இப்போட்டிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாடிபிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.  ஜல்லிக்கட்டு போட்டிகளின் முதல் சுற்று முடிவில் 12 பேர் மாடுகளை பிடித்து அசத்தியுள்ளனர்.

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ; சீறிப்பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள்..

இதனிடயே கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்ற்தழ் மற்றும் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே போட்டிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டன. மேலும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி இணையதளங்கள் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. பொது மக்கள் வீடுகளில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை ஓட்டி அப்பகுதியில் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget