மேலும் அறிய

என்னது தமிழ்நாட்டில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சியா? ஏன்? 75 இலட்ச ரூபாய் செலவில் என்ன திட்டம்?

வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட முடியாது என்பதாலும், புலி வேட்டையாடும் திறன் இல்லாமல் இருப்பதாலும் புலிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக புலிக் குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்க 75 லட்ச ரூபாய் செலவில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட கூண்டிற்குள் புலிக்குட்டியை வனத்துறையினர் விட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள முடிஸ் என்ற இடத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உடல் நலக்குறைவோடு 8 மாதமான ஆண் புலிக்குட்டி சுற்றி திரிந்து வந்தது. இதையடுத்து அந்த ஆண் புலிக்குட்டியை மானாம்பள்ளி வனத் துறையினர் மீட்டு ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், வாகன போக்குவரத்து சத்தம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்து புலிக்குட்டியை மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.


என்னது தமிழ்நாட்டில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சியா? ஏன்? 75 இலட்ச ரூபாய் செலவில் என்ன திட்டம்?

கடந்த 9 மாதங்களாக வனத்துறையினர் அந்த ஆண் புலிக்குட்டியை சிகிச்சை அளித்து பராமரித்து வந்தனர். தற்போது அந்த புலிக்குட்டிக்கு ஒன்றரை வயது ஆகும் நிலையில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. புலிக்கு கூண்டிற்குள் உணவு அளிக்கப்பட்ட காரணத்தினால் புலியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட முடியாது என்பதாலும், புலி வேட்டையாடும் திறன் இல்லாமல் இருப்பதாலும் புலிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.


என்னது தமிழ்நாட்டில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சியா? ஏன்? 75 இலட்ச ரூபாய் செலவில் என்ன திட்டம்?

இதன்படி சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் கம்பி வேலி அமைத்து தண்ணீர் வசதி, ஓடி விளையாட கூடிய வசதி அமைத்து கொடுத்து சிறிய விலங்குகளை வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்பட்ட பின்பு புலியை வனப்பகுதிக்குள் விடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.75 லட்சம் செலவில் வனத்துறையினரால் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் வேட்டையாடும் பயிற்சி அளிப்பதற்காக கூண்டிற்குள் புலிக்குட்டியை வனத்துறையினர் விட்டனர். புலிக்கு மயக்க மருந்து செலுத்தி கொண்டு வரப்பட்டு,  புதியதாக அமைக்கப்பட்ட கூண்டில் விடப்பட்டது. 


என்னது தமிழ்நாட்டில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சியா? ஏன்? 75 இலட்ச ரூபாய் செலவில் என்ன திட்டம்?

அக்கூடாரத்தின் சிறப்பு அம்சமான ஓய்வு அறை, தண்ணீர் தொட்டி, படுக்கை, மரக் கூடாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இக்கூண்டிற்குள் விடப்பட்ட புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து வேட்டையாடும் பயிற்சி அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம சுப்பிரமணி, பொள்ளாச்சி இணை இயக்குனர் கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget