மேலும் அறிய

கோவையில் தொடர் மழை காரணமாக நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை

இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக குளங்கள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக வாலாங்குளம் நிரம்பியுள்ளது. இதன் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி சாலை புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரும், சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் ஆறு போல ஓடி வருகிறது. வெள்ள நீர் அப்பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்ததால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். 3 நாட்களாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், தொடர்ந்து சாலைகளில் தண்ணீர் ஓடி வருகிறது.

Very Heavy rainfall and thunderstorm expected in different parts of the District in the coming two days. Public are requested to strictly follow safety measures while venturing out.#NorthEastMonsoon #Rains @tnsdma @Kovai_TNSDMA pic.twitter.com/AxFZpMBXxf

— District Collector, Coimbatore (@CollectorCbe) November 10, 2021

">

இந்நிலையில் கோவையில் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனிடையே அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் டிவிட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார். தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக பள்ளிக்கு மாணவர்கள் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பியதால் அலைகழிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆசிரியர்கல் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

https://bit.ly/2TMX27X

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

https://bit.ly/3AfSO89

ட்விட்டர் பக்கத்தில் தொடர

https://bit.ly/3BfYSi8

யூடிபில் வீடியோக்களை காண

https://bit.ly/3Ddfo32

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget