’கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்’ ஆட்டோ ஆம்புலன்ஸ் இயக்கும் வாலிபர் சங்கம்!

கோவை அருகே கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

FOLLOW US: 

கோவை அருகே கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடிக்கிறது. தற்போது வரை ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 347 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்றுப் பரவல், கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கும் பரவி வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு தன்னார்வலர்களும், தன்னார்வ அமைப்பினரும் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.’கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்’ ஆட்டோ ஆம்புலன்ஸ் இயக்கும் வாலிபர் சங்கம்!

அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிவர் சங்கத்தினர் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர். அன்னூர் பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டருக்குள் உள்ள மக்கள் உதவும் வகையில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை முகாம்களுக்கு செல்லவும், குணமடைந்தவர்கள் வீடு திரும்பவும் இந்த ஆட்டோ சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கியுள்ளார்.

இதுகுறித்து அவ்வமைப்பை சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், “அன்னூர் பகுதியில் எங்களது அமைப்பு சார்பில் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறோம். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கி வந்தோம். தற்போது அன்னூர் பகுதியிலும் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் தொற்று பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட அளவில் கடந்த 7 நாட்கள் தொற்று பாதிப்பு அன்னூர் வட்டாரத்தில் 2.72 சதவீதமாக உள்ளது.’கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்’ ஆட்டோ ஆம்புலன்ஸ் இயக்கும் வாலிபர் சங்கம்!

கொரோனா தொற்று பாதித்தவர்களை உறவினர்கள் கூட ஒதுக்கி வைக்கும் நிலை உள்ளது. ஊரடங்கு காரணமாக மருத்துவமனைகளுக்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. ‘கவலைப்படாதீங்க. உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்பதை வெளிக்காட்டும் வகையில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளோம். எங்களது அமைப்பை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மூலம் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவும், குணமடைந்தவர்கள் வீடு திரும்பவும் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த ஆட்டோ சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் கூடுதல் ஆட்டோக்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது அன்னூர் பகுதி மக்களுக்கு உதவிகரமாக அமையும்” என அவர் தெரிவித்தார்.

Tags: corono lockdown service dyfi annur free auto ambulance

தொடர்புடைய செய்திகள்

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

குக் வித் சாராயம்: கூடுதல் ஆட்களை பணியமர்த்தி தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர்!

குக் வித் சாராயம்: கூடுதல் ஆட்களை பணியமர்த்தி தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர்!

’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!