மேலும் அறிய

நீலகிரி : கண்காணிக்க சென்ற இடத்தில் கதிகலங்க வைத்த பி.எம். 2 யானை: வனக்காப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

பி.எம். 2 யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக யானையை தொடர்ந்து வனப்பணியாளர் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). கடந்த 19ம் தேதி இரவு பி.எம். 2 என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று அவரது வீட்டை சேதப்படுத்தியதோடு, பாப்பாத்தியை தாக்கி கொன்றது. உறவினர்கள் இருவர் காயங்களுடன் தப்பினர். உடற்கூராய்விற்காக காவல் துறையினர் உடலை எடுக்க முயன்ற போது, இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை, உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், உடலை உடற்கூராய்விற்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு பிறப்பிக்கும் வரை பாப்பாத்தி உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்ததால் மூன்று நாட்கள் ஆகியும் உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் உள்ளது.

இதனிடையே பி.எம். 2 யானை பிடிக்க கோரி கூடலூர் எம்.எல்.. பொன் ஜெயசீலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்த பின், ஒரு மணி நேரத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார். அப்போது பேசிய அவர், ”பந்தலூர், தேவாலா பகுதியில் பி.எம். 2 யானை கடந்த ஓராண்டில், 45 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. யானையை பிடித்து வேறு பகுதிக்கு விட வேண்டும் என, ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் யானையை பிடிக்கவில்லை என்றால் ஆட்கொல்லியாக உருமாறி மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுவதால், அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நீலகிரி : கண்காணிக்க சென்ற இடத்தில் கதிகலங்க வைத்த பி.எம். 2 யானை: வனக்காப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

இதற்கிடையே முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்திலிருந்து யானையை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தலைமையில் இந்த குழு பந்தலூர் பி.எம். 2 என்ற யானையை கூடலூர் வன கோட்டம் சார்பில் கும்கி யானைகளை பயன்படுத்தி மயக்க ஊசி செலுத்தி, 1972 வன விலங்கு சட்டத்தின்படி யானையை பிடிக்க வேண்டும். மேலும், யானையின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்த பின், அனுபவம் வாய்ந்த வன கால்நடை மருத்துவர் குழு உதவியோடு பிடித்து, முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியை புகைப்படம், வீடியோ எடுத்து சமர்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.எம். 2 யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக யானையை தொடர்ந்து வனப்பணியாளர் கண்காணித்து வருகின்றனர். இன்று 4 கண்காணிப்பு குழுவினர் காட்டிமட்டம், அக்கார்டு கீழ் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பணியில் வன காவலர் காளன் என்பவரும் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு புதருக்குள் யானை இருப்பது தெரியாமல் காளன் நெருங்கிச் சென்ற நிலையில், அந்த யானை விரட்டியுள்ளது. காளன் தப்பியோட முயன்ற போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காளனை மீட்ட வனப்பணியாளர்கள் முதலுதவி அளித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Embed widget