மேலும் அறிய

கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி கொரோனா தொற்று..! அச்சத்தில் மக்கள்..!

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 238 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 909 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2257-ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோட்டில் இன்று 122 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 152  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1521 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 97915-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95746 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 648 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 64 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 9 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 74 பேர் குணமடைந்துள்ள நிலையில், 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90021ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88265 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 39 பேர் குணமடைந்துள்ள நிலையில், 366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 31650 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31090 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 194-ஆக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget