மேலும் அறிய

அதிவேகம் உயிருக்கு ஆபத்து – பதபதைக்க வைக்கும் CCTV காட்சி

கோவை எல்என்டி (L&T) பைபாஸ் சாலை, சிந்தாமணி புதூர் அருகே லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ள கோவை சிந்தாமணி புதூர் எல்என்டி பைபாஸ் சாலையில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இடதுபுறமாக முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த திமுக கொடிக்கம்பம் மற்றும் நெடுஞ்சாலை கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர், சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். விபத்தில் அவர் பலத்த காயமடைந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இருசக்கர வாகனம் வேகமாக லாரியை முந்த முயற்சிக்கும் போது மோதல் ஏற்பட்டு, கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையான ஓட்டமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget